
10th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
- சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பட்டா மாற்றமல் உள்ள நிலங்களுக்கு பட்டா மாறுதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் 29,000 பேருக்கு பட்டா வழங்க அமைச்சரை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- இதன்முலம் 86 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர். 4 ஆண்டுகளில், 10.25 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. நீர்நிலை புறம்போக்கு இடங்களுக்கு பட்டா வழங்க முடியாது.
- நில உரிமையாளர்களுக்கு 6 மாதத்திற்குள் புதிய பட்டா மாற்றி வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ராமசந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
- 6 மாத காலத்தில் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது
- வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர்.
- இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின.
- சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர்.
- இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த வன்முறை, இன்றளவும் முடிவுக்கு வரவில்லை.
- இதற்கிடையே, மணிப்பூரில் நடந்த கலவரங்களுக்கு மாநில முதல்வரே காரணம் எனக் கூறி, சில ஆடியோக்கள் வெளியாகின. குக்கி இன மாணவர் அமைப்பு, இந்த ஆடியோ ஆதாரங்களை இரண்டு கட்டங்களாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.
- இதற்கு மணிப்பூர் அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. ஆயினும் இதற்காக முதலமைச்சர் பதவியிலிருந்து பிரேன் சிங் விலக வேண்டுமென்று கடுமையான வலியுறுத்தல்களும் அளிக்கப்பட்டு வந்தன.
- இந்நிலையில் ஆளுநரை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை பிரேன் சிங் அளித்துள்ளார். ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் கட்சி கூறியிருந்த நிலையில் இம்முடிவை பிரேன் சிங் எடுத்துள்ளார்.
- உலக அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலில் ஒத்தக் கருத்துடைய நாடுகள் பரஸ்பரம் பயனடையும் வகையில், பாதுகாப்புத்துறையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை நவீன தொழில்நுட்பங்கள் வழங்கிடும் என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
- பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படைத் தளத்தில் 15-வது ஏரோ இந்தியா கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார்.