Type Here to Get Search Results !

76-வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் 2025 / 76th REPUBLIC DAY CELEBRATION 2025

  • 76-வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் / 76th REPUBLIC DAY CELEBRATION: 76வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய தலைநகர் டெல்லியில் காலை 10.30 மணி அளவில் குடியரசு தினவிழா தொடங்கியது. 
  • இதற்காக கடமைப் பாதைக்கு வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினரான இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோரை, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். 
  • குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
  • 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றினார். இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று தேசியக் கொடிக்கும் தேசிய கீதத்துக்கும் மரியாதை செலுத்தினர். அப்போது, 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
  • இதையடுத்து ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. ராணுவம், கடற்படை, விமானப்படை உள்பட பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகள் குழுக்களாக அணிவகுத்து வந்து குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தினர். 
  • இதையடுத்து, நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றும் ராணுவ வாகன அணிவகுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு நவீன ரக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.
  • இதையடுத்து, பல்வேறு மாநிலங்களின் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாநிலங்களின் கலாச்சார நடனங்கள் நடைபெற்றன.

மலர் தூவிய எம்ஐ - 17 ஹெலிகாப்டர்கள்

  • 76-வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் / 76th REPUBLIC DAY CELEBRATION: இன்றைய குடியரசு தின அணிவகுப்பு, க்ரூப் கேப்டன் அலோக் அஹ்லாவாட் தலைமையில் எம்ஐ - 17 ஹெலிகாப்டர்கள் திவாஜ் அமைப்பில் அணிவகுத்து மலர்கள் தூவியதில் இருந்து தொடங்கியது. 
  • அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பாதுகாப்பு படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

முதல் முறையாக முப்படைகளின் அலங்கார வாகனம் காட்சி

  • 76-வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் / 76th REPUBLIC DAY CELEBRATION: டெல்லி கடமைப் பாதையில் முதல் முறையாக முப்படைகளின் அலங்கார வாகனம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. 
  • வலுவான மற்றும் பாதுகாப்பான இந்தியா என்ற கருப்பொருளில் இடம்பெற்ற அந்த ஊர்தியில், இந்தியாவின் முப்படைகளுக்கு இடையே நெட் ஒர்க்கிங் மற்றும் தகவல்தொடர்புக்கு உதவும் 'கூட்டு செயல்பாட்டு அறை' அமைக்கப்பட்டிருந்தது.
  • இந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 5000 கலைஞர்கள் பங்கேற்ற 45 நடன வடிவங்கள் அடங்கிய 11 நிமிட கலாச்சார நிகழ்ச்சி நடந்தது. 
  • ஜெயதி ஜெய மமஹே பாரதம் என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்வு முதல் முறையாக விஜய் சவுக் முதல் சி ஹெக்ஸாகன் வரையிலான முழு கடமைப்பாதையில் ஒரே நேரத்தில் நடந்தது.

மகளிர் சிஆர்பிஎஃப் படை

  • 76-வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் / 76th REPUBLIC DAY CELEBRATION: கடமைப் பாதையில் அணிவகுத்த பாதுகாப்பு படையினரில், 148 உறுப்பினர்களைக் கொண்ட பெண்கள் மட்டுமே அடங்கிய மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் ஒன்று. 
  • இதற்கு உதவி கமாண்டன்ட் ஐஸ்வரியா ஜாய்.எம் தலைமை தாங்கினார். இரண்டாவது முறையாக டெல்லி போலீஸ் இசைக் குழு, பேண்ட் மாஸ்டர் ருயாங்குனுவோ தலைமையில் முழுவதும் பெண்கள் அடங்கிய பேண்ட் குழுவை அமைத்திருந்தது.

டெல்லியில் அணிவகுத்த இந்தோனேசிய படை

  • 76-வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் / 76th REPUBLIC DAY CELEBRATION: இந்தக் குடியரசு தின விழாவில், இந்தோனேசியாவின் தேசிய ராணுவப் படை மற்றும் இந்தோனேசிய ராணுவ அகாடமியின் ராணுவ இசைக்குழுவும் டெல்லி கடமைப் பாதையில் அணிவகுத்துச் சென்றன. இதில் அணி வகுப்பு குழுவில் 152 பேரும், இசைக்குழுவில் 190 பேரும் இடம்பெற்றிருந்தனர்.

முன்னாள் படைவீரர்களின் அலங்கார ஊர்தி

  • 76-வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் / 76th REPUBLIC DAY CELEBRATION: இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பின் மற்றொரு சிறப்பம்சமாக இந்தியாவின் படைவீரர்களின் அசைக்க முடியாத மனப்பான்மைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 'எப்போதும் வளர்ந்த இந்தியாவை நோக்கி' என்ற கருப்பொருளில் முன்னாள் ராணுவ வீரர்களின் அலங்கார ஊர்தி நடைபெற்றது.

காட்சிப்படுத்தப்பட்ட ஏவுகணைகள்

  • 76-வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் / 76th REPUBLIC DAY CELEBRATION: இந்த அலங்கார ஊர்தி அணிவகுப்பில், பிரமோஸ் ஏவுகணை, பினாகா ராக்கெட் அமைப்பு மற்றும் ஆகாஷ் வான்பாதுகாப்பு அமைப்பு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன. 
  • அதேபோல், ராணுவத்தின் போர் கண்காணிப்பு அமைப்பு, சஞ்சய் மற்றும் டிஆர்டிஒ- வின் பிராலே ஏவுகணையும் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன.
  • உலகில் தற்போது இருக்கும் ஒரே குதிரைப் படை பிரிவான 61-வது குதிரைப்படை பிரிவு பாதுகாப்புப் படைகளின் அணிவகுப்பினை வழிநடத்தியது. மூன்று ராணுவ சேவைகளின் மூத்த பெண் அதிகாரிகள் பெண் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

31 அலங்கார ஊர்திகள்

  • 76-வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் / 76th REPUBLIC DAY CELEBRATION: டெல்லி கடமைப் பாதையில் நடந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில், 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 10 மத்திய அமைச்சரவை மற்றும் துறைகளின் அலங்கார ஊர்திகள் 'தங்க இந்தியா: பாரம்பரியம் மற்றும் மேம்பாடு' என்ற தலைப்பின் கீழ் அணிவகுத்தன.
  • இதில் கோவா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் இடம்பெற்றன. 
  • உத்தரப்பிரதேசத்தின் அலங்கார ஊர்தியில் மகா கும்பமேளா இடம் பெற்றிருந்தது என்றாலும் மத்தியப் பிரதேசத்தின் வாகனத்தில் சிவிங்கிப் புலி இந்தியா திரும்பியது இடம்பெற்றிருந்தது.
  • குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 70 கம்பெனி துணை ராணுவப்படைகள், 70,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நிகழ்வுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன.
  • தேசிய தலைநகரில் ஆறு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதில், முகத்தினை உணரும் 2,500 சிசிடிவி கேமிராக்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு போன்றவை அடங்கி இருந்தன. 200 கட்டிடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தன.

ENGLISH

  • 76th REPUBLIC DAY CELEBRATION: The 76th Republic Day is being celebrated with great pomp and show across the country. The Republic Day celebrations began at 10.30 am in the national capital, Delhi. 
  • For this, President Draupadi Murmu and special guest Indonesian President Prabowo Subianto, who arrived on duty, were welcomed by Prime Minister Narendra Modi, Defense Minister Rajnath Singh and others. 
  • Vice President Jagdeep Dhankhar, Lok Sabha Speaker Om Birla, Union Ministers including Amit Shah, tri-service commanders, and senior military officers attended the ceremony.
  • President Draupadi Murmu hoisted the national flag with a 21-gun salute. Following this, the national anthem was played. Everyone stood up and paid homage to the national flag and the national anthem. At that time, flowers were showered by 4 military helicopters.
  • A military parade was then conducted. Various units of the security forces, including the Army, Navy, and Air Force, marched in groups and paid homage to the President. 
  • Following this, a military parade was held to showcase the country's military might. Various modern vehicles arrived one after the other, enthralling the audience.
  • Following this, a parade of decorated vehicles from various states was held. This was followed by cultural dances from various states.

MI-17 helicopters showered flowers

  • 76th REPUBLIC DAY CELEBRATION: Today's Republic Day parade began with MI-17 helicopters, led by Group Captain Alok Ahlawat, marching in a Divaj formation and showering flowers. Following this, President Draupadi Murmu accepted the parade of the security forces.

First-ever display of decorated vehicles of the three services

  • 76th REPUBLIC DAY CELEBRATION: For the first time, a decorated vehicle of the three services was displayed on the Delhi duty route. The theme of the parade was ‘Strong and Secure India’, and a ‘Joint Operations Room’ was set up to facilitate networking and communication between the three services of India.
  • This year, an 11-minute cultural show featuring 45 dance forms was held, with 5,000 artists from across the country participating. The event, titled ‘Jayathi Jaya Mamahe Bharath’, was the first time that the entire duty route from Vijay Chowk to C Hexagon was simultaneously covered.

Women’s CRPF contingent

  • 76th REPUBLIC DAY CELEBRATION: Among the security forces that marched on the duty route was the 148-member all-women Central Reserve Police Force, led by Assistant Commandant Aishwarya Joy.M. For the second time, the Delhi Police Band, led by Band Master Ruyangunuo, formed an all-women band.

Indonesian Army parades in Delhi

  • 76th REPUBLIC DAY CELEBRATION: In this Republic Day parade, the Indonesian National Army and the Indonesian Military Academy's military band also marched through the Delhi route of duty. The marching band consisted of 152 members and 190 members.

Ex-Servicemen's float

  • 76th REPUBLIC DAY CELEBRATION: Another highlight of this year's Republic Day parade was the ex-servicemen's float with the theme 'Towards an Ever-Developing India', paying tribute to the unwavering spirit of India's soldiers.

Missiles on display

  • 76th REPUBLIC DAY CELEBRATION: The parade featured the BrahMos missile, the Pinaka rocket system and the Akash air defence system. Similarly, the Army's combat surveillance system, Sanjay, and the DRDO's BrahLe missile were also displayed for the first time.
  • The 61st Cavalry Division, the only cavalry division in the world, led the parade of the security forces. Senior women officers from the three military services represented the women power.

31 floats

  • 76th REPUBLIC DAY CELEBRATION: The float parade on the Delhi duty route featured floats from 16 states and union territories, 10 central ministries and departments under the theme 'Golden India: Heritage and Development'.
  • The floats included floats from Goa, Uttar Pradesh, West Bengal, Delhi, Madhya Pradesh and Haryana. While the float from Uttar Pradesh featured the Maha Kumbh Mela, the float from Madhya Pradesh featured the return of the leopard to India.
  • Security arrangements were tight in Delhi ahead of the Republic Day celebrations. 70 companies of paramilitary forces and 70,000 police personnel were deployed for security. Traffic diversions were also made to ensure that the event did not face any disruption.
  • Six layers of security were in place in the national capital, including 2,500 CCTV cameras with facial recognition, an anti-drone system, etc. Access to 200 buildings was restricted.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel