
31st JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2024 டிசம்பர் மாதத்திற்கான, முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீடு
- எட்டு முக்கிய தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீட்டு எண் 2023 டிசம்பர் குறியீட்டுடன் ஒப்பிடும்போது, 2024 டிசம்பரில் 4 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது.
- சிமெண்ட், நிலக்கரி, உரங்கள், எஃகு ஆகியவற்றின் உற்பத்தி 2024 டிசம்பரில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
- நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த, தனிப்பட்ட உற்பத்தி செயல்திறனை தொழில்துறை குறியீட்டு எண் அளவிடுகிறது.
- 2024 செப்டம்பர் மாதத்திற்கான முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீட்டு எண்ணின் இறுதி வளர்ச்சி விகிதம் 2.4 சதவீதமாக உள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 4.2 சதவீதம் (தற்காலிகமானது) ஆகும்.
- நிலக்கரி - நிலக்கரி உற்பத்தி (எடை: 10.33 சதவீதம்) 2023 டிசம்பரை விட 2024 டிசம்பரில் 5.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
- கச்சா எண்ணெய் - கச்சா எண்ணெய் உற்பத்தி (எடை: 8.98 சதவீதம்) 2023 டிசம்பரை விட 2024 டிசம்பரில் 2.1 சதவீதம் குறைந்துள்ளது.
- இயற்கை எரிவாயு - இயற்கை எரிவாயு உற்பத்தி (எடை: 6.88 சதவீதம்) 2023 டிசம்பரை விட 2024 டிசம்பரில் 1.8 சதவீதம் குறைந்துள்ளது.
- பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் - பெட்ரோலிய சுத்திகரிப்பு உற்பத்தி (எடை: 28.04 சதவீதம்) 2023 டிசம்பரை விட 2024 டிசம்பரில் 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
- உரங்கள் - உர உற்பத்தி (எடை: 2.63 சதவீதம்) 2023 டிசம்பரை விட 2024 டிசம்பரில் 1.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
- எஃகு - எஃகு உற்பத்தி (எடை: 17.92 சதவீதம்) 2023 டிசம்பரை விட 2024 டிசம்பரில் 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
- சிமெண்ட் - சிமெண்ட் உற்பத்தி (எடை: 5.37 சதவீதம்) 2023 டிசம்பரை விட 2024 டிசம்பரில் 4.0 சதவீதம் அதிகரித்துள்ளது.
- மின்சாரம் - மின்சார உற்பத்தி (எடை: 19.85 சதவீதம்) 2023 டிசம்பரை விட 2024 டிசம்பரில் 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
- 2025 பிப்ரவரி 7 முதல் 14 வரை சீனாவின் ஹார்பினில் நடைபெறவிருக்கும் 9-வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் (AWG)- 2025-ல் இந்திய அணியின் பங்கேற்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 59 விளையாட்டு வீரர்கள், 29 குழு அதிகாரிகள் உட்பட 88 இந்திய பிரதிநிதிகள் பங்கேற்க அரசு அனுமதி அளித்துள்ளது.
- முதல் முறையாக, ஆல்பைன் ஸ்கீயிங், ஃபிகர் ஸ்கேட்டிங், ஷார்ட் டிராக் ஸ்பீடு ஸ்கீயிங், ஸ்பீடு ஸ்கேட்டிங் (லாங் டிராக்) ஆகியவற்றில் போட்டியிடும் விளையாட்டு வீரர்களுக்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான உதவி திட்டத்தின் கீழ் முழு நிதி உதவி வழங்கப்படுகிறது.
- இந்த குறிப்பிடத்தக்க முடிவு குளிர்கால விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கும், இந்திய விளையாட்டு வீரர்கள் ஆசியாவின் மிக உயர்ந்த நிலைகளில் போட்டியிட வாய்ப்புகளை வழங்குவதற்குமான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
- ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள், இந்திய வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், உலகின் முன்னணி வீரர்களுடன் போட்டியிடவும் ஒரு முக்கியமான தளத்தை வழங்குகிறது. இது எதிர்கால உலகளாவிய போட்டிகளுக்கு தளத்தை அமைக்கும்.
- 38-வது தேசிய விளையாட்டி போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தின் நர்மதா நித்தின் ராஜூ தங்கப் பதக்கம் வென்றார்.
- களரிபயட்டுவில் தமிழகம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. நீச்சலில் மகளிருக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லி பிரிவில் தமிழகத்தின் ஸ்ரீநிதி நடேசன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.