
26th JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
76ஆவது குடியரசு தினவிழா - தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
- 76ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை கடற்கரை சாலையில் தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மூவர்ணக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
- குடியரசு தினவிழாவையொட்டி கடற்கரை சாலையில் கம்பீரமாக அணிவகுத்த முப்படை வீரர்கள் மற்றும் காவல்துறை சிறைத் துறை உள்பட் பல்வேறு படை பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர்.
- காவல் துறை, சிறைத் துறை உள்பட பல்வேறு படை பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர்.
- 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றினார். ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியங்களை விளக்கும் வகையில் அம்மாநிலங்களின் நடனங்கள், இசை ஆகியவை அரங்கேற்றப்பட்டது. இசைக்கருவிகள் முழங்கிய படி 300 கலைஞர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
- டிஜிட்டல் பார்வையாளர் புத்தகத்தில் குறிப்புகளை பிரதமர் மோடி பதிவு செய்தார். முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இந்தோனேசியாவை சேர்ந்த 382 பேர் கொண்ட குழுவினர் அணி வகுப்பில் பங்கேற்றனர்.
- ராணுவ வீரர்களின் அணிவகுப்பில், இந்திய ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் அதி நவீன ஆயுதங்கள், ஏவுகணைகளை ஏந்திய வாகனங்கள், பீரங்கிகள் இடம் பெற்றிருந்தன. பல்வேறு மாநிலங்களின் அலங்கார வாகனங்களும் ஊர்வலத்தில் பங்கேற்றன.
- முன்னதாக விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியன்டோவை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். முப்படை வீரர்களுடன் தேசிய மாணவர் படையினரும், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
- முன்னதாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.
- பிரம்மோஸ் ஏவுகணை, பினாகா ராக்கெட், ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை, சஞ்சய் போர்க்கள கண்காணிப்பு அமைப்பு, பிரளய் ஏவுகணை, டி90 பீஷ்மா டாங்குகள், படைவீரர்களை கொண்டு செல்லும் சரத் வாகனங்கள், நாக் ஏவுகணைகள், ஐராவத் தாக்குதல் வாகனம் ஆகியவை இந்த அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன. இதில் பிரளய் ஏவுகணை மற்றும் சஞ்சய் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்பது இதுவே முதல் முறை.