Type Here to Get Search Results !

21st JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


21st JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்திய ராணுவத்திற்காக 47 டி -72 பாலம் அமைக்கக் கூடிய கவச வாகனங்களை கொள்முதல் செய்வதற்காக கனரக வாகன தொழிற்சாலையுடன் ரூ.1,561 கோடி மதிப்பிலான ஒப்பந்தம்
  • இந்திய ராணுவத்திற்காக மொத்தம் ரூ.1,560.52 கோடி மதிப்பில் 47 டி-72 பாலம் அமைக்கக்கூடிய கவச வாகனங்களை கொள்முதல் செய்வதற்காக கனரக வாகன தொழிற்சாலையுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
  • இன்று (2025 ஜனவரி 21) புதுதில்லியில் பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சகம், கனரக வாகன தொழிற்சாலை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • பி.எல்.டி என்பது படைகளின் தாக்குதல், தற்காப்பு நடவடிக்கைகளின் போது பாலங்களை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான உபகரணமாகும். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்படும் திட்டம் என்பதால், பாதுகாப்புத் துறையில் இந்தியாவில் தயாரியுங்கள் முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும். 
  • நாட்டில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அதிகரிப்பதிலும், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதிலும் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார் 
  • அமெரிக்காவில் கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி, பதவியேற்பு விழா நடைபெற்றது.
  • பதவியேற்ற பிறகு, அதிபர் ட்ரம்ப் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். அடுத்த 4 ஆண்டுகளில் அவர் மேற்கொள்ள உள்ள திட்டங்களை அறிவித்தார். 
  • இந்நிலையில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை இரண்டாவது முறையாக விலக்கிக் கொள்வதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். 
  • இதைத் தொடர்ந்து, காலநிலை மாற்றத்திற்கு காரணமான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் 2015-ம் ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான தனது நோக்கத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்து, டொனால்டு டிரம்ப் ஒரு முறையான கடிதத்தில் கையெழுத்திட்டார்.
  • இது மட்டும் இல்லாமல் டொனால்டு டிரம்ப்  செவ்வாய் கிரகத்தில் நட்சத்திரங்களையும் கோடுகளையும் நடுவதற்கு அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவோம், 
  • அமெரிக்காவின் தென் எல்லைகளில் அவசர நிலை, அமெரிக்காவில், ஆண், பெண் என்ற 2 பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும், மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்புகளை அறிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel