
18th JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பிரதமர் நரேந்திர மோடி ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகளை வழங்கினார்
- 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 230-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 50,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று (18.01.2025) வழங்கினார்
- அண்மைக்கால ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமங்களில் கணக்கெடுப்பு செய்து வீடுகள் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு 'உரிமைகளின் பதிவு' வழங்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் தொலைநோக்குடன் ஸ்வமித்வா திட்டம் பிரதமரால் தொடங்கப்பட்டது.
- சொத்துகளை பணமாக்குவதற்கும், வங்கிக் கடன்கள் பெற்று அதன் மூலம் நிதிநிறுவனக் கடனை அடைப்பதற்கும், சொத்து தொடர்பான தகராறுகளைக் குறைப்பதற்கும், கிராமப்புறங்களில் சொத்துகளையும் சொத்து வரியையும் சிறந்த முறையில் மதிப்பீடு செய்வதற்கும் கிராம அளவில் விரிவான திட்டமிடலை செயல்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவுகிறது.
- 3.17 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது. இது இலக்கு கிராமங்களில் 92 சதவீதமாகும். இதுவரை, 1.53 லட்சம் கிராமங்களுக்கு, 2.25 கோடி சொத்து அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
- 2025-26 காலகட்டத்தில் தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளா்ச்சி 6.2 சதவீதமாக அதிகரிக்கக்கூடும். அதேசமயம் 2025, ஏப்ரல் மாதத்தில் இருந்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதாரம் 6.7 சதவீத வளா்ச்சியில் தொடரும்.
- இந்தியாவில் சேவைகள் துறை கடந்த நிதியாண்டைவிட விரிவடையும். வணிகத்துக்கேற்ற பொருளாதார சூழலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முன்னெடுப்பால் உற்பத்தித் துறை மேலும் வலுவடையும். அதிகரித்து வரும் தனியாா் முதலீடு மற்றும் நிலையான அரசு முதலீடு போன்ற காரணங்களால் பல்வேறு துறைகளில் முதலீடுகள் நிலைத்தன்மையை எட்டும்.
- குறைவான முதலீடு மற்றும் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவுகள் காரணமாக நிகழ் நிதியாண்டில் (2024, ஏப்ரல்-2025, மாா்ச்) இந்திய பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்.
- இருப்பினும், வேளாண் உற்பத்தி, ஊரக வருமானத்தில் முன்னேற்றம் போன்ற காரணிகளால் தனியாா் நுகா்வு வளா்ச்சி வீழ்ச்சியடைய வாய்ப்பில்லை.
- இந்தியாவைத் தவிா்த்து தொற்காசிய பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் வளா்ச்சி 2024-இல் (நாடுகள் பின்பற்றும் நிதியாண்டுக்கேற்ப) 3.9 சதவீதமாக இருக்கக்கூடும்.
- பொருளாதார சரிவில் இருந்து பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் மீண்டு வருவதால் இந்த வளா்ச்சியை எதிா்பாா்க்கலாம். வங்கதேசத்தில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழலால் அங்கு முதலீடுகள் குறைந்து வருகின்றன.
- எரிசக்தி குறைபாடு, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொழிற்துறை சரிந்து, அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்ந்துள்ளது.
- இந்தியாவை தவிா்த்து தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகள் 2025-இல் 4 சதவீதமும், 2026-இல் 4.3 சதவீதமும் வளா்ச்சியடையும். 2024, ஜூலை முதல் 2025 ஜூன் வரையிலான காலகட்டத்தில் வங்கதேசத்தின் வளா்ச்சி 4.1 சதவீதமாக குறையும்.
- அதேசமயம் 2025, ஜூலை முதல் 2026, ஜூன் வரையிலான காலகட்டத்தில் வங்கதேசத்தின் பொருளாதார வளா்ச்சி 5.4 சதவீதமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
- உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான 'ஐஎன்எஸ் மும்பை', பன்னாட்டு பயிற்சியான எல்ஏ பெரோஸின் நான்காவது பதிப்பில் பங்கேற்கிறது.
- இந்த பதிப்பில் ஆஸ்திரேலிய கடற்படை, பிரெஞ்சு கடற்படை, அமெரிக்க கடற்படை, இந்தோனேசிய கடற்படை, மலேசிய கடற்படை, சிங்கப்பூர் கடற்படை, கனடா கடற்படை உள்ளிட்ட பல்வேறு கடற்படைகள் பங்கேற்கின்றன.
- பயிற்சி, தகவல் பகிர்வு ஆகியவற்றுடன் கடல்சார் கண்காணிப்பு, கடல்சார் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் பொதுவான கடல்சார் சூழ்நிலை விழிப்புணர்வை வளர்ப்பதை இந்த பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தக் கூட்டுக் கடற்படை பயிற்சி ஜனவரி 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த கப்பலின் பங்கேற்பு அமைந்துள்ளது.