
13th JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
- ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் 'இசட்' வடிவ சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
- ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோனாமார்க் (இசட்-மோர் -Z-Morh) சுரங்கப்பாதையை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- சோனாமார்க் சுரங்கப்பாதையின் பணிகள் மே 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் பொருளாதார சவால்கள் காரணமாக 2018 ஆம் ஆண்டு இந்த பணிகள் நிறுத்தப்பட்டதால் இந்த திட்டம் முடிவடைய தாமதம் ஏற்பட்டது.
- பின்னர், இந்தத் திட்டம், அக்டோபர் 2012 ஆம் ஆண்டு அப்போதைய தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்த சி.பி.ஜோஷியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
- ஆரம்பத்தில் 2016-2017 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று திட்டமிடப்பட்ட சுரங்கப்பாதை இப்போது நிறைவடைந்துள்ளது. ரூ.2,700 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டது.
- 8,650 அடிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள சோனாமார்க் சுரங்கப்பாதை, நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர்த்து, பாதுகாப்பான மற்றும் வேகமான பயணத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லடாக் பிராந்தியத்தில் நாட்டின் பாதுகாப்புத் தேவைகளைப் பொறுத்தவரை சோனாமார்க் சுரங்கப்பாதை மிகவும் முக்கியமானது.
- 6.5 கிலோமீட்டர் நீளமுள்ள சோனாமார்க் சுரங்கப்பாதையின் மூலம் இனி ஆண்டு முழுவதும், ஸ்ரீநகரிலிருந்து சோனாமார்க் பகுதியை பார்வையிட முடியும். இனி எல்லா காலங்களிலும் மக்கள் சுலபமாக பயணிக்கவும் சுற்றுலா பயணிகள் வருவதற்கும் உதவியாக இருக்கும்.
- ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்திற்கு மத்திய அரசின் தேசிய சுகாதார ஆணையத்திற்கும் ஒடிசா அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்தத் திட்டம் குறைந்த கட்டணத்தில், ஒடிசாவின் மகளிர் மற்றும் முதியோருக்கு உயர்தர சுகாதார சேவை கிடைப்பதை உறுதி செய்யும்.
- ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதார திட்டத்தை செயல்படுத்திய 34-வது மாநிலமாக ஒடிசா இணைந்துள்ளது.
- இதன் மூலம் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். பெண் உறுப்பினர்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
- இத்திட்டத்தின் கீழ் மொத்தம் சுமார் 1.03 கோடி குடும்பங்கள் பயனடையும். ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் வரும், 67.8 லட்சம் குடும்பங்கள் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடையும்.
- உள்நாட்டு அதிநவீன அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் முதன்மை நிறுவனமான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையமானது (சி-டாட்) மண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஜம்முவில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
- தொலைதொடர்பு அலைக்கற்றை பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான அகண்ட அலைவரிசை அலைக்கற்றைக்கான சென்சார் ஏஎஸ்ஐசி-சிப் உருவாக்கத்திற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையின் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின் கீழ் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க வழிவகை செய்கிறது.
- இந்தத் திட்டம், தொலைத்தொடர்பு சானதங்களின் தயாரிப்புகள், வடிவமைத்தல், வர்த்தகமயமாக்கல் போன்ற நடவடிக்கைகளுக்கும் உதவுகிறது.
- இத்திட்டம் குறைந்த விலையில் அகண்ட அலைவரிசைக்கான மொபைல் சேவைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.