6th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனஸ்கோ விருது
- தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில், ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இக்கோவில் சுமார் 7 ஏக்கரில் அமைந்துள்ளது.
- ராஜராஜசோழனின் மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தொடர்ந்து குலோத்துங்கன் சோழன் மற்றும் விக்கிரமசோழன் ஆகியோரால், கோவில் புணரமைத்தாக கல்வெட்டு உள்ளது. கோயிலில் பழமையான கலை நயமிக்க, அழகிய சிலைகளுடன் கூடியவை.
- இந்த நிலையில், யுனஸ்கோ ஆசிய - பசிபிக் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் விருதுகள் வழங்கும் அமைப்பு, தொன்மை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியதற்காக கோவிலுக்கு சிறப்பு விருதை அறிவித்தது.
- ஃபென்ஜால் புயல் பாதிப்பு சீரமைப்புப் பணிக்காக, முதற்கட்டமாக ரூ.2,000 கோடி வழங்க பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில், மத்திய அரசு ரூ.944.80 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மாநில பேரிட நிவாரண நிதிக்கு மத்திய அரசின் பங்காக ரூ.944.80 கோடியை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- மத்திய குழு அறிக்கையின் அடிப்படையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் தொகை விடுவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. புயல் பாதிப்புகளை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
- புதுதில்லி பாரத மண்டபத்தில் அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.
- அஷ்டலட்சுமி மஹோத்சவம் என்பது மூன்று நாள் கலாச்சார விழாவாகும். இது டிசம்பர் 6 முதல் 8 வரை புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. இது வடகிழக்கு இந்தியாவின் பரந்த கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுகிறது.