Type Here to Get Search Results !

4th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


4th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சங்கு வளையல்கள்
  • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட 16 குழிகளில், உடைந்த நிலையிலான சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், வட்டச் சில்லு, தங்கமணிகள் என இதுவரை 2600க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இந்நிலையில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் இருந்து சுடுமண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள், சங்கு வளையல்கள், கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
  • 3ம் கட்ட அகழ்வாய்வில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள் மற்றும் சங்கு வலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதன் மூலமாக முன்னோர்கள் அணிகலன்களுக்கும் அழகிருக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்று அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் தெரிவித்தார்.
  • தொழில்கள் நடந்ததற்கு சான்றாக பல்வேறு அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் வயல்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்
  • எண்ணெய் வயல்கள் (ஒழுங்குபடுத்துதல் மற்றும் வளா்ச்சி) திருத்த மசோதா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
  • எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தியை நிா்வகிக்கும் தற்போதைய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் இந்த மசோதா, கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
4 நியமனதாரர்களை நியமிக்கலாம - வங்கிகள் சட்டத்தில் திருத்தம் 
  • தற்போது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், தனது நியமனதாரராக ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும். இதன் மூலம், வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர் உயிரிழந்தால், அவரின் கணக்கில் உள்ள பணத்தை நியமனதாரர் பெற முடியும்.
  • இந்நிலையில், வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவின்படி வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், தனது நியமனதாரர்களாக 4 பேரை குறிப்பிடலாம்.
  • வங்கித் துறையின் நிர்வாக தரநிலைகள், வங்கிகளில் பணம் செலுத்துவோர் மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துதல், பொதுத் துறை வங்கிகளின் தணிக்கை தரத்தை மேம்படுத்துதல், கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்கள் பதவிக் காலத்தை அதிகரித்தல் உள்ளிட்டவை இந்த மசோதாவின் நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்கள் (தலைவர் மற்றும் முழு நேர இயக்குநர் தவிர) பதவிக் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்க மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. மாநில கூட்டுறவு வங்கி வாரியத்தில் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநரும் கடமையாற்ற இந்த மசோதா அனுமதிக்கிறது.
  • இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, வங்கி ஒழுங்காற்றுச் சட்டம் 1949, பாரத ஸ்டேட் வங்கிச் சட்டம் 1955, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1970, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1980 ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவர, மொத்தம் 19 திருத்தங்கள் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளன. 
  • வங்கித் துறையை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel