24th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உத்தரப்பிரதேசம், ஆந்திராவுக்கு ஊரக வளர்ச்சிக்கான 15-வது நிதிக்குழு மானியம் ஒதுக்கீடு
- உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் 15-வது நிதிக்குழு மானியத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 2-வது தவணையாக ரூ.1598.80 கோடி மதிப்பிலான நிபந்தனையற்ற மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்த நிதி மாநிலத்தின் தகுதியுள்ள அனைத்து 75 மாவட்ட ஊராட்சிகள், தகுதியுள்ள 826 வட்டார பஞ்சாயத்துகள், தகுதியுள்ள அனைத்து 57691 கிராம பஞ்சாயத்துக்களுக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்டு உள்ளது.
- 2024-25-ம் நிதியாண்டில் 15-வது நிதிக்குழு மானியமாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2-வது தவணையாக ரூ.420.9989 கோடி நிபந்தனையற்ற மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனோடு சேர்த்து முதல் தவணையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.25.48 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
- தகுதி வாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 13,097 கிராம ஊராட்சிகளுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட 650 வட்டார ஊராட்சிகளுக்கும், மாநிலத்தில் உள்ள அனைத்து 13 மாவட்ட ஊராட்சிகளுக்கும் பொருந்தும்.
- பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகம் ஆகியவற்றின் மூலம் மத்திய அரசு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15-வது நிதிக்குழு மானியத்தை மாநிலங்களுக்கு வழங்க பரிந்துரை செய்கிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியம் ஒரு நிதியாண்டில் 2 தவணைகளில் வழங்கப்படுகிறது.
மணிப்பூர், கேரளா உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்கள் மாற்றம் - குடியரசுத் தலைவர் உத்தரவு
- ஒடிசா மாநில ஆளுநர் ரகுபர் தாஸின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இந்த சூழலில் மிசோரம் மாநில ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டி, ஒடிசா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மிசோரம் மாநில ஆளுநராக முன்னாள் ராணுவ தலைவர் விஜய் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். பிஹார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத், கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், பிஹார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பொறுப்பேற்கும் நாள் முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2024 - சாஹு துஷாா் மனே சாம்பியன்
- மத்திய பிரதேசத்தில் நடைபெறும் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ரயில்வேஸ் வீரா் சாஹு துஷாா் மனே, ஆடவா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் திங்கள்கிழமை சாம்பியன் பட்டம் வென்றாா்.
- மகாராஷ்டிரத்தை சோ்ந்த அவா், இறுதிச்சுற்றில் 252.3 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, தெலங்கானாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் 252.2 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா். ராஜஸ்தானின் யஷ் வா்தன் வெண்கலப் பதக்கம் பெற்றாா்.
- அதிலேயே ஜூனியா் ஆடவா் இறுதிச்சுற்றில், மகாராஷ்டிரத்தை சோ்ந்த முன்னாள் உலக சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல் 254.9 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றாா்.
- முன்னதாக இதிலேயே சீனியா் பிரிவில் சீன ஒலிம்பிக் சாம்பியன் ஷெங் லிஹாவ் 254.5 புள்ளிகள் பெற்றதே உலக சாதனையாக இருந்த நிலையில், தற்போது ருத்ராங்க்ஷ் அதை முறியடித்திருக்கிறாா். கா்நாடகத்தின் அபிஷேக் சேகா் 251.4 புள்ளிகளுடன் வெள்ளியும், ஹரியாணாவின் ஹிமன்ஷு வெண்கலமும் பெற்றனா்.
- அதே ஹிமான்ஷு, ஆடவா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் யூத் பிரிவில் 253 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினாா். மத்திய பிரதேசத்தின் யஷ் பாண்டே வெள்ளியும், மேற்கு வங்கத்தின் அபினவ் ஷா வெண்கலமும் வென்றனா்.
29ஆவது தேசிய மகளிா் கால்பந்து சாம்பியன்ஷிப் 2024 - மணிப்பூா் சாம்பியன்
- சீனியா் மகளிருக்கான 29-ஆவது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் மணிப்பூா் வெற்றிக்காக, ஆசெம் ரோஜா தேவி 55-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.
- இதன் மூலம் மணிப்பூா் 1-0 கோல் கணக்கில் ஒடிஸாவை வீழ்த்தி திங்கள்கிழமை சாம்பியன் ஆனது. நடப்பு சாம்பியனாக போட்டியில் கலந்துகொண்ட மணிப்பூா், தற்போது 23-ஆவது முறையாக கோப்பை வென்றுள்ளது.
- மறுபுறம், 7-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்த ஒடிஸா, அதில் 6-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது. ஒடிஸா தனது அனைத்து இறுதி ஆட்டங்களிலுமே மணிப்பூரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.