22nd DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது
- பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குவைத் நாட்டிற்குச் சென்றுள்ளார். அதன்படி முதல் நாளான நேற்று (21.12.2024) பிரதமர் மோடிக்கு அரசு சார்பிலும், இந்தியர்கள் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- இந்நிலையில் இந்த பயணத்தின் இரண்டாவது நாளான இன்று (22.12.2024) அந்நாட்டின் இளவரசரைச் சந்தித்து பேசினார். அப்போது குவைத் நாட்டின் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான, 'ஆப் முபாரக் அல் கபீர்' விருது வழங்கப்பட்டது.
- இதன் மூலம் பிரதமர் மோடிக்குக் கிடைத்த 20வது சர்வதேச விருது இதுவாகும். முன்னதாக 19 நாடுகள் சார்பில் பிரதமர் மோடிக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அதே சமயம் இந்தியா- குவைத் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த விருதைப் பெற்ற அமெரிக்க அதிபர்களான பில் கிளின்டன் மற்றும் ஜார்ஜ் புஷ், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உலகத் தலைவர்களும் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
- கடற்படை பயன்பாட்டுக்காக பி17ஏ கிளாஸ் மற்றும் பி15பி கிளாஸ் கப்பல்கள் தயாரிக்க மும்பையில் உள்ள மசகான் டாக்ஸ் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
- இந்த இரு கப்பல்களின் வடிவமைப்பை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவு உருவாக்கி கொடுத்தது. அதன்படி போர்க்கப்பல் மேற்பார்வை குழு கண்காணிப்பில், உலகத்தரத்துக்கு இணயைாக இந்த 2 போர்க்கப்பல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
- நீல்கிரி கப்பல் கடலில் எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் எதிரிநாட்டு ரேடார்களில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- மேலும், இதில் நவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள், ஏவுகணைகள், விமானங்கள் நெருங்கினால் இதில் உள்ள சென்சார் கருவிகள் உடனடியாக கண்டுபிடித்து எச்சரிக்கை விடுக்கும்.
- அவற்றை தாக்குதவதற்கு தேவையான அனைத்து ஆயுதங்களும் இந்த கப்பலில் உள்ளன. இந்த போர்க்கப்பலுக்கு உதவியாக எந்த துணை போர்க்கப்பல்களும் செல்லத் தேவையில்லை. எங்கும் தனியாக செல்லும் முன்னணி கப்பலாக இது கடற்படையில் இருக்கும்.
- சூரத் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் மற்றும் பராக்-8 ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஏவமுடியும். மேலும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் ஆயுதங்களும், சென்சார்கள் இதில் உள்ளன.
- கப்பலின் அடிப் பகுதியில் சோனார் ஹம்சா என்ஜி, டார்பிடோ ஏவுகணைகளை ஏவும் ட்யூப் லாஞ்சர், ஏஎஸ்டபிள்யூ ராக்கெட் லாஞ்சர் ஆகியைவை இந்த கப்பலில் உள்ளன.