18th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
HOME OF CHESS என்ற அகாடமி உருவாக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கான பாராட்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் விளையாட்டுக்கென Home of Chess என்ற புது அகாடமி உருவாக்கப்படும்.
- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பகண்டை பகுதியில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் மேற்கொள்ளப்பட்ட மேற்புற ஆய்வுகள் பழங்கால சுடுமண் பொருட்களை வெளிப்படுத்தியுள்ளது.
- இதில் சுடுமண் புகைப்பிடிப்பான் மற்றும் அகல்விளக்கு போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழர் நாகரிகத்தின் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான செழிப்பு, அறிவியல் வளர்ச்சி, கலைகளின் மேம்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் முக்கியத்துவமான தகவல்களாக விளங்குகின்றன.
- தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் புதுதில்லி விக்யாமுட் பவனில் கொண்டாடப்பட்டது. இதில், குடியரசுத் துணைத் தலைவா் ஜக்தீப் தன்கா், மத்திய மின்சாரம் மற்றும் வீட்டு வசதி அமைச்சா் ஸ்ரீபாத் யெசோ நாயக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
- இதில், ஆற்றல் சேமிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கும், உற்பத்தியில் எவ்வித குறைபாடின்றி புதுப்பிக்கதக்க ஆற்றல் மூலம் இயங்கி வரும் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
- அந்த வகையில் போக்குவரத்து பிரிவில் புதுமையை செயல்படுத்தி 'வந்தே பாரத்' ரயிலை தயாரித்த ஐசிஎப் தொழிற்சாலை முதல் பரிசு பெற்றது. விருதை ஐசிஎப் முதன்மை தலைமை பொறியாளா் (எலக்ட்ரிக்கல்) சி.ஆா்.ஹரிஷ் பெற்றுக்கொண்டாா்.