17th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
"கலைஞரின் படைப்புலகம்" நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.12.2024) தலைமைச் செயலகத்தில், எழுத்தாளர் திரு.இமையம் அவர்கள் எழுதிய "கலைஞரின் படைப்புலகம்" நூலினை வெளியிட்டார்
- நூற்றாண்டு காணும் ஆளுமைகள் எனும் தலைப்பின்கீழ் புகழ்பெற்ற அரசியல் ஆளுமைகள் மற்றும் எழுத்தாளர்கள் குறித்து சிறப்பு நூல்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 2022-ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது.
- அந்த வரிசையில் எழுத்தாளர் இமையம் "கலைஞரின் படைப்புலகம்" என்ற இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலானது, கலைஞர் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கடிதங்கள், பயண நூல், திரைக்கதை வசனங்கள், திரையிசை பாடல்கள், நெஞ்சுக்கு நீதி, உரைகள் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தொகுப்பாகும்.
- இந்நூலில் இந்திய அளவில் புகழ்பெற்ற 19 எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
- இந்நூலில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் எந்தெந்த ஆண்டு எழுதப்பட்டது என்ற விவரமும் காலவரிசைப்படி வழங்கப்பட்டிருக்கிறது.
- நாடாளுமன்ற தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபைக்கும், யூனியன் பிரதேச சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா 2024 மற்றும் யூனியன் பிரதேசம் சட்ட (திருத்தம்) மசோதா 2024 ஆகியவை மக்களவையில் இன்று (டிசம்பர் 17) தாக்கல் செய்யப்பட்டது.
- இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்வது தொடர்பான வாக்கெடுப்பின் முடிவுகளை மக்களவை சபாநாயகர் அறிவித்தார். இந்த மசோதாவிற்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 196 வாக்குகளும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
- இதைத் தொடர்ந்து 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
- இதைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் விதி 74இன் கீழ், இந்த மசோதாவுக்கு ஜேபிசி அமைப்பதை முன்மொழிவதாக தெரிவித்தார். இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது
- அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.