16th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
- கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
- நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், மேம்பாடு, பராமரிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்காக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
- இந்த ஆணையத்துக்கு ஒரு தலைவா், 3 முழு நேர உறுப்பினா்கள், 3 பகுதி நேர உறுப்பினா்கள் இருப்பா். உறுப்பினா்கள் 62 வயது வரை பணியாற்றலாம்.
- நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கும் தரம் உயா்த்துவதற்கும், உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் தயாரிக்கலாம். தனியாருடன் அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என்று சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, மாநிலத்துக்கென தனி ஆணையத்தை அமைக்கும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.
- மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, இன்று காலை குடியரசுத் தலைவருக்கு வருகை தந்தார். அங்கு அவரை குடியரசுத் தலைவரும், பிரதமரும் வரவேற்றனர்.
- தொடர்ந்து, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் திசநாயக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
- அப்போது பிரதமர் மோடி பேசியதாவது ”இந்தியாவில் பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டபோது இலங்கையிலும் அது கொண்டாடப்பட்டது. சென்னை - யாழ்பானம் இடையேயான விமான சேவை, கப்பல் சேவை ஆகியவை சுற்றுலாவை பலப்படுத்தி நமது கலாச்சார உறவுகளை வலுப்படுத்தியுள்ளன.
- நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை படகு சேவைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டதை அடுத்து, இப்போது இந்தியாவின் ராமேசுவரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் சேவை தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
- மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். இந்த விஷயத்தில், மனிதாபிமான அணுகுமுறையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பது நாங்கள் ஒப்புக் கொண்டோம்.
- இலங்கையில் கட்டுமானம் மற்றும் நல்லிணக்கம் குறித்து பேசினோம். தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்துவதற்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன்.
- இலங்கை அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கான முயற்சியில் இந்தியா எப்போது நம்பகமான அண்டை நாடாக இருக்கும் என்று திசநாயகவிடம் நான் உறுதியளித்துள்ளேன்” என்றார்.