![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMMSS9A_VSig1bbo2O4iuWqI7Px9GvNjVbxDQZMtJBEoQL9L5JJBZONHh6Cx8TE4aeVJ3OKy5Msto1NixuA4agEj89mSt5NJe1KBId6pkykDpqGmxBOAdTaJzOYB0jEyBrc9YI2N8j9r8/s640/ca+cov.jpg)
உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை ஊக்குவிக்க 'ஜல்வாஹக்' என்ற கொள்கையை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் வெளியிட்டார்
- தேசிய நீர்வழிகள் 1 (கங்கை நதி), தேசிய நீர்வழிகள் 2 (பிரம்மபுத்திரா நதி), தேசிய நீர்வழிகள் 16 (பராக் நதி) வழியாக நீண்ட தூர சரக்குகளின் போக்குவரத்தை ஊக்குவிக்கும் சரக்கு மேம்பாட்டுக்கான 'ஜல்வஹக்' என்ற முக்கிய கொள்கையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் வெளியிட்டார்.
- மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால், எம்வி ஏஏஐ, எம்வி ஹோமி பாபா மற்றும் எம்வி திரிசூல் ஆகிய சரக்குக் கப்பல்களையும் அஜய் மற்றும் திகு ஆகிய இரண்டு தளவாடப் படகுகளையும் புதுதில்லி அரசு படகுத்துறையிலிருந்து இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.