13th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வெம்பக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு
- விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இந்த அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், உடைந்த நிலையிலுள்ள சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2,850-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.
- இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தோண்டப்பட்ட அகழாய்வுக் குழியில் கூம்பு வடிவம் மற்றும் நீல் உருண்டை வடிவிலான சூது பவள மணிகள் கண்டறியப்பட்டன.
- இதன் மூலம் வெம்பக்கோட்டைக்கும் வட மாநிலங்களுக்கான வணிகத் தொடர்பை உறுதிப்படுத்துவதாக தொல்லியல் துறையில் தெரிவித்துள்ளனர்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.
- பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரயாக்ராஜ் சென்று, சங்கமத்தில் பூஜை மற்றும் தரிசனத்தையும், பின்னர் அக்ஷய வத விருட்சத்தில் பூஜையையும், அதைத் தொடர்ந்து அனுமன் மந்திர் மற்றும் சரஸ்வதி கூப்பில் தரிசனம் மற்றும் பூஜையையும் மேற்கொண்டார். மஹா கும்பமேளா கண்காட்சி தளத்தில் நடைப்பயணத்தையும் பிரதமர் மேற்கொண்டார்.
- மகா கும்பமேளா 2025க்கான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பிரயாக்ராஜில் உள்கட்டமைப்பை அதிகரிப்பதற்கும் தடையற்ற இணைப்பை வழங்குவதற்கும் 10 புதிய சாலை மேம்பாலங்கள், நிரந்தர படித்துறைகள், ஆற்றங்கரை சாலைகள் போன்ற பல்வேறு ரயில் மற்றும் சாலை திட்டங்கள் இதில் அடங்கும்.