12th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கோயில் நுழைவுப் போராட்டம் நினைவாக,1994-ல் தந்தை பெரியாருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அந்த நினைவிடத்தை புனரமைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
- இதனை தொடர்ந்து வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவகத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். இதில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர்களுக்கான மாடம், சிறுவர் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
- 1994-ல் திறக்கப்பட்ட இந்த நினைவகம், தற்போது ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் துவங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா சென்றார்.
- இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைத்தார்.
- விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- இதுவரை தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2850-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் மூன்றாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில் புதன்கிழமை தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் நீல நிற கண்ணாடி மணி, சுடுமண்ணால் ஆன பதக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 2000 முதல் மொத்த அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) 1 டிரில்லியன் டாலரை எட்டியதன் மூலம் இந்தியா தனது பொருளாதார பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
- நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், அந்நிய நேரடி முதலீடு சுமார் 26% அதிகரித்து 42.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
- கணிசமான கடன் அல்லாத நிதி ஆதாரங்களை வழங்குவதன் மூலமும், தொழில்நுட்ப பரிமாற்றங்களை ஊக்குவிப்பதன் மூலமும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் இந்தியாவின் வளர்ச்சியில் அந்நிய நேரடி முதலீடு மாற்றத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.
- "இந்தியாவில் தயாரியுங்கள்", தாராளமயமாக்கப்பட்ட துறைசார் கொள்கைகள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்ற முன்முயற்சிகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளன,
- அதே நேரத்தில் போட்டி தொழிலாளர் செலவுகள் மற்றும் உத்திசார்ந்த ஊக்கத்தொகைகள் பன்னாட்டு நிறுவனங்களை தொடர்ந்து ஈர்க்கின்றன.
- கடந்த பத்தாண்டில் (ஏப்ரல் 2014 முதல் செப்டம்பர் 2024 வரை), மொத்த அந்நிய நேரடி முதலீடு 709.84 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த 24 ஆண்டுகளில் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 68.69% ஆகும்.
- இந்த வலுவான முதலீடுகளின் வருகை, உலகப் பொருளாதார நிலையை வடிவமைப்பதில் இந்தியாவின் முக்கிய பங்கை சுட்டிக் காட்டுகிறது.
- உலக போட்டிக் குறியீடு 2024-ல் இந்தியாவின் தரவரிசை 2021-ல் 43 வது இடத்தில் இருந்து மூன்று இடங்கள் முன்னேறி 40 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கூடுதலாக, முதல் 50 நாடுகளில் 48 வது மிகவும் புதுமையான நாடாக இந்தியா பெயரிடப்பட்டது.
- உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு 2023-ல் 132 பொருளாதாரங்களில் 40 வது இடத்தைப் பிடித்தது. இது 2015-ல் அதன் 81 வது இடத்திலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
- 2024 அக்டோபர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்திக்கான வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதமாகும். இந்த விகிதம் செப்டம்பர் மாதத்தில் 3.1 சதவீதமாக இருந்தது.
- சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 0.9 சதவீதம், 4.1 சதவீதம் மற்றும் 2.0 சதவீதமாகும்.
- தொழில்துறையின் உற்பத்திக் குறித்த விரைவான மதிப்பீடுகள் 2023 அக்டோபர் மாதத்தில் 144.9 ஆக இருந்த நிலையில், 2024 அக்டோபரில் இந்த மதிப்பீடுகள் 149.9 ஆக உள்ளது.
- சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 13 சுற்றுகளில் குகேஷ் - டிங் லிரென் ஆகியோர் 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
- இதனால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 14வது சுற்று இன்று (டிச. 12) தொடங்கியது. இந்தச் சுற்றும் சமநிலையில் முடியும் என்ற நிலையிலேயே இருவரின் ஆட்டமும் நீடித்துவந்தது.
- எனினும் போட்டி முடிவதற்கு சிறிதுநேரத்திற்கு முன்பு 55வது நகர்த்தலில் லிரென் செய்த சிறிய தவறு, குகேஷுக்கு சாதகமாக அமைந்தது.
- இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட குகேஷ் 58வது நகர்த்தலில் ஆட்டத்தை முடித்து ஒரு புள்ளியைப் பெற்றார். குகேஷ் 7.5, டிங் லிரென் 6.5 என்ற புள்ளிப் பட்டியலின்படி உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை குகேஷ் வென்றார்.
- இதன்மூலம், விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்ற இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.
- மேலும், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ரஷிய வீரர் கேரி காஸ்பரோவ், இதுவரை அந்தப் பெருமை பெற்றிருந்தார். இவர் 22 வயதில் சாம்பியனானார். ஆனால், குகேஷ் இந்த சாதனையை 18 வயதில் முறியடித்துள்ளார்.