Type Here to Get Search Results !

9th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


9th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் ஆன மணி கண்டெடுப்பு
  • விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
  • இதுவரை கண்ணாடி மணிகள் கல் மணிகள், சூது பவள கல் மணிகள், முழுமையான சங்கு வளையல், பழங்கால சிகை அலங்காரத்துடன்கூடிய பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டு நாயக்கா் கால செப்புக் காசு, அணிகலன்கள், திமிலுடன்கூடிய காளை உருவப் பொம்மை உள்ளிட்ட 1,800-க்கும் மேற்பட்ட பொருள்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.
  • இந்த நிலையில், விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருள்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் வெள்ளக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற அகழாய்வில் 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவிவித்துள்ளார்.
கன்னியாஸ்திரி, பாதிரியார் சம்பளமும் வருமான வரிக்கு உட்பட்டதே - உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவு
  • கிறிஸ்தவ தேவாலயத்தால் நடத்தப்படும், உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களின் சம்பளத்துக்கு வருமான வரி விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஏற்கெனவே தீர்ப்பளித்திருந்தார். ''சம்பளம் நேரடியாக மறை மாவட்டத்துக்கு செல்வதால், டிடிஎஸ் பிடித்தம் செய்ய முடியாது'' என்று தீர்ப்பில் கூறியிருந்தார்.
  • தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, 'கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களின் சம்பளம், வருமான வரி பிடித்தத்துக்கு உட்பட்டதே' என்று கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. 
  • இதை எதிர்த்து தேவாலய பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 
  • அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தத்தார், ''சம்பளமாக அரசு வழங்கும் மானியம் நேரடியாக மறை மாவட்டத்துக்குத்தான் செல்கிறதே தவிர, பள்ளிகளில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களுக்கு செல்லவில்லை. எனவே, அவர்களது சம்பளத்தில் இருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்'' என்று வாதிட்டார்.
  • ஆனால், இதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அவர்கள் தமது உத்தரவில் கூறியதாவது:ஒருவர் சம்பளம் பெறுகிறார் என்றால், அதற்கு கட்டாயம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும். டிடிஎஸ் பிடித்தம் செய்வதில் விலக்கு அளிக்குமாறு கோரமுடியாது.
  • சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அரசு மானிய தொகை வழங்காது அரசு ஒருபோதும் மறை மாவட்டத்துக்கு மானிய தொகையை வழங்காது. பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் நபர்களுக்காகத்தான் அந்த தொகையை வழங்குகிறது. 
  • அந்த சம்பளமும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களின் வங்கி கணக்கில்தான் செலுத்தப்படுகிறது. அதை அவர்களது வருமானமாகத்தான் கருத வேண்டும்.
  • எனவே, தேவாலயத்தால் நடத்தப்படும், உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் வருமான வரிக்கு உட்பட்டதே என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நாங்களும் உறுதி செய்கிறோம். 
  • இவ்வாறு கூறிய நீதிபதிகள், தேவாலய பள்ளி நிர்வாகங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel