5th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உ.பியில் 16,000 மதரஸாக்களை கலைத்த உத்தரவு ரத்து - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
- உத்தரபிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டம், 2004, பின்னர் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு ரிட் மனுவை விசாரித்த போது மதரஸா சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று அறிவித்தது.
- அதன் மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணையின் முடிவில், மதரஸாக்களை கலைக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
- இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தது, அது சட்ட அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் மதச்சார்பின்மை கொள்கையை மீறுவதாக அறிவித்தது.
- மதரஸாக்களை கலைத்துவிட்டு, அங்கு பயிலும் மாணவர்களுக்கு முறையான பள்ளிக் கல்வி முறையில் இடமளிக்க வேண்டும் என்று மாநில அரசை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியது.
- இது சுமார் 17 லட்சம் மதரஸா மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தவறு இருப்பதாக, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- மக்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் பொது நலனுக்காக கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு இல்லை என்று இன்று வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 7 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
- சட்டப்பிரிவு 39B-ல் உள்ளபடி சமூகத்தில் உள்ள குடிமக்களுக்கு சொந்தமான சொத்துகளை, பொது நலன் கருதி மாநிலங்கள் கையகப்படுத்த முடியாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
- ஒரு தனிநபருக்கு சொந்தமான சொத்தை சமூகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானதாக கருத முடியாது என்றும், ஏனெனில் அந்த சொந்துகள் அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதகாகவும் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
- ஹரியானா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 நிதியாண்டில் 15-வது நிதி ஆணைய மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது.
- ஹரியானாவின் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையின் ஒரு பகுதியாக ரூ.194.867 கோடி மதிப்புள்ள நிபந்தனையற்ற மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- நிதி விடுவிப்பதற்கான நிபந்தனையைப் பூர்த்தி செய்த மாநிலத்தில் உள்ள 18 தகுதியான மாவட்ட ஊராட்சிகள், 139 தகுதியான வட்டார ஊராட்சிகள் மற்றும் 5911 தகுதியான கிராம பஞ்சாயத்துகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
- திரிபுராவிலுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையாக ரூ.31.40 கோடி நிபந்தனையற்ற மானியமாகவும், வரையறுக்கப்பட்ட மானியத்தின் முதல் தவணையாக ரூ.47.10 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிதி அனைத்து 1260 கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்கப்படுகிறது.
- மிசோரமுக்கும் நிதி ஆணையம், நிதியை வழங்கியுள்ளது. இது 2022-23 நிதியாண்டின் நிபந்தனையற்ற மானியங்களின் 2-வது தவணையாகும், இதில் ரூ.14.20 கோடி மற்றும் 2022-23 நிதியாண்டின் 2-வது தவணை வரையறுக்கப்பட்ட மானியங்கள் ரூ.21.30 கோடி அடங்கும். இந்த நிதியானது தன்னாட்சி மாவட்ட கவுன்சில் பகுதிகள் உட்பட அனைத்து 834 கிராம சபைகளுக்கும் பகிரப்படும்.