28th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜார்க்கண்டின் 14-வது முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்
- 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 56 இடங்களுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்திய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
- முன்னதாக, ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் புதிய எம்எல்ஏ-க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
- இதில் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஹேமந்த் சோரன் தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து ஆளுநா் மாளிகைக்குச் சென்று ஆளுநா் சந்தோஷ் கங்வாரிடம் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரன் உரிமை கோரியிருந்தார்.
- இதையடுத்து, கடந்த 2000-ஆம் ஆண்டு நவ.15-இல் பிகாரை பிரித்து ஜாா்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. அந்த மாநிலத்தின் முதல்வராக 4-ஆவது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார்
- பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, ஷிபு சோரன், தமிழக துணை முதல்வர் உதயநிதி, மேற்குவங்க முதல்வர் மம்தா, ஆம் ஆத்மி கட்சியில் ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி "ஏகலைவா" என்ற புனைப்பெயர் கொண்ட இந்திய ராணுவத்திற்கான ஆன்லைன் கற்றல் தளத்தை இன்று தொடங்கி வைத்தார்.
- இந்த முயற்சி இந்திய ராணுவம் கற்பனை செய்தபடி "மாற்றத்தின் தசாப்தத்திற்கு" தன்னை முன்னெடுத்துச் செல்வதோடும், 2024-ம் ஆண்டிற்கான இந்திய இராணுவத்தின் கருப்பொருளான "தொழில்நுட்ப தொழில்நுட்ப ஏற்பு ஆண்டு" என்பதுடனும் ஒத்துப்போகிறது.