26th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அடல் புத்தாக்க இயக்கத்தைத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2028 மார்ச் 31 வரை 2,750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிதி ஆயோக்கின் கீழ் அதன் முன்னோடி திட்டமான அடல் புத்தாக்க இயக்கத்தைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- அடல் புத்தாக்க இயக்கம் 2.0 என்பது வளர்ந்த பாரத்தை நோக்கிய ஒரு முயற்சியாகும், இது ஏற்கனவே உள்ள இந்தியாவின் துடிப்பான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு சூழலியலை விரிவுபடுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, "ஒரே நாடு, ஒரே சந்தா" என்ற மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
- இந்தத் திட்டம் எளிமையான, பயனருக்கு உகந்த மற்றும் முழுமையான டிஜிட்டல் செயல்முறை மூலம் நிர்வகிக்கப்படும். இதன் மூலம் கல்விப் புலம் சார்ந்த ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் ஆராய்ச்சி இதழ்களைப் படிக்க முடியும்.
- இது அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களுக்கான "ஒரே நாடு ஒரு சந்தா" வசதியாக இருக்கும்.
- புதிய மத்திய துறைத் திட்டமாக, 2025, 2026 மற்றும் 2027 ஆகிய 3 ஆண்டுகளுக்கு, ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்திற்காக மொத்தம் சுமார் 6,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் மொத்தம் ரூ.7,927 கோடி (தோராயமாக) மதிப்பீட்டிலான மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- ஜல்கான் - மன்மாட் 4-வது ரயில் பாதை (160 கி.மீ), பூசாவல் - கந்த்வா 3 & 4-வது ரயில் பாதை (131 கி.மீ) மற்றும் பிரயாக்ராஜ் (இராதத்கஞ்ச்) - மாணிக்பூர் 3-வது ரயில் பாதை (84 கி.மீ) ஆகிய திட்டங்களாகும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், அருணாச்சலப் பிரதேச மாநிலம் ஷி யோமி மாவட்டத்தில் ஹியோ நீர்மின் திட்டம் அமைப்பதற்கு ரூ.1939 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் நிறைவு காலம் 50 மாதங்கள் ஆகும்.
- 240 மெகாவாட் (3 x 80 மெகாவாட்) நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்த திட்டம் 1000 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
- இத்திட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் தற்போதைய மின்சார விநியோக நிலையை மேம்படுத்தவும், தேசிய மின்கட்டமைப்பை சமநிலைப்படுத்தவும் உதவும்.
- வடகிழக்கு மின்சாரக் கழகம் லிமிடெட் மற்றும் அருணாச்சலப் பிரதேச அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சி நிறுவனம் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- சாலைகள், பாலங்கள் மற்றும் அதனைச் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு நிதி உதவியாக ரூ.127.28 கோடியை மத்திய அரசு வழங்கும். மேலும், மாநிலத்தின் பங்குத் தொகையாக ரூ.130.43 கோடியையும் மத்திய அரசு வழங்கும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், வருமான வரித்துறையின் பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- நிரந்தர கணக்கு எண் 2.0 திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.1435 கோடியாகும்.