20th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இஸ்ரோவின் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
- விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புதல் உள்ளிட்டவற்றில் உலக நாடுகள் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களோடும் இஸ்ரோ ஒப்பந்தம் செய்து இயங்குகிறது.
- அந்த வகையில் இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 (Falcon 9) ராக்கெட் மூலம் இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் - என்2 விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
- இந்திய நேரப்படி இன்று (நவ.19) அதிகாலை 12.01 மணியளவில் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் 4700 கிலோ எடை கொண்டது என்பது கவனிக்கத்தக்கது.
- இஸ்ரோவுக்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி சீனாவின் மகளிரணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியனான இந்திய அணி 3 ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி வீராங்கனை தீபிகா 31ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீன அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.