ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு 2024 / G20 ANNUAL SUMMIT 2024
TNPSCSHOUTERSNovember 20, 2024
0
ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு 2024 / G20 ANNUAL SUMMIT 2024: பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நவம்பா் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபா் ஜோ பைடன், சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பங்கேற்றார்.
முன்னதாக, ஜி20 உச்சிமாநாட்டின் போது, அவர் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்பட உலகளாவிய தலைவர்களைச் சந்தித்தார்.
பிரேசிலில் மோடிக்கு இந்திய சமூகத்தினர் சமஸ்கிருத கீர்த்தனைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜி20 உச்சிமாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் மோடி உரையாடினார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு அவர்களின் முதல் சந்திப்பு இது.
உச்சிமாநாட்டின் ஒரு அமர்வின்போது, மோடி இந்தியாவில் சென்ற ஆண்டு நடைபெற்ற G20 உச்சிமாநாட்டின் கருப்பொருளான "ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்பதை வலியுறுத்தினார். உணவு, எரிபொருள் மற்றும் உரம் ஆகியவற்றில் உலகளாவிய மோதல்களின் தாக்கத்தை மோடி எடுத்துரைத்தார்.
செவ்வாயன்று, பிரேசில், இத்தாலி, இந்தோனேசியா, போர்ச்சுகல், நார்வே, சிலி, அர்ஜென்டினா, எகிப்து, தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் மோடி இருதரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டார். பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன், மோடி இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை செய்தார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்த மோடி, விண்வெளி ஆய்வு, ஆற்றல் திட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பது குறித்து விவாதிக்க சந்தித்தார்.
இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் உடனான பேச்சுவார்த்தையில், தொழில்நுட்பம், பசுமை எரிசக்தி, பாதுகாப்பு போன்ற துறைகளில் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு மோடி விருப்பம் தெரிவித்தார். வரும் ஆண்டில் இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் திட்டத்தை ஸ்டார்மர் அறிவித்தார்.
மோடிக்கும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கும் இடையே நடந்த விரிவான விவாதங்களுக்குப் பிறகு, இந்தியாவும் இத்தாலியும் 2025-29க்கான மூலோபாய செயல் திட்டத்தை வெளியிட்டன. இந்த திட்டம் பாதுகாப்பு, வர்த்தகம், சுத்தமான எரிசக்தி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் கூட்டாக செயல்படவுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. ஆஸி., பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜி20 உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, கயானா அதிபர் முகமது இர்ஃபான் அலியின் அழைப்பின் பேரில் நரேந்திர மோடியின் கயானா பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம் நவம்பர் 21 வரை தொடரும்.
56 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஒரு இந்தியப் பிரதமர் கயானா பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. கயானா வந்தடைந்த மோடியை, கயானா அதிபர் முகமது இர்ஃபான் அலி, பார்படாஸ் பிரதமர் மியா அமோர் மோட்லி, கிரெனடா பிரதமர் டிக்கன் மிட்செல் ஆகியோர் வரவேற்றார்.
கயானாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களும் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். இந்தியா-கயானா இடையேயான நெருங்கிய நட்புறவுக்குச் சான்றாக, ஜார்ஜ்டவுன் மேயர், ஜார்ஜ்டவுன் நகரின் திறவுகோலை பிரதமரிடம் வழங்கினார்.
ENGLISH
G20 ANNUAL SUMMIT 2024: He participated in the annual summit of G20 nations held in Rio de Janeiro, Brazil on November 18 and 19, along with the leaders of various countries including US President Joe Biden and Chinese President Xi Jinping.
Earlier, during the G20 summit, he met global leaders including US President Joe Biden, French President Emmanuel Macron and UK Prime Minister Keir Starmer.
The Indian community gave Modi a rousing welcome in Brazil with Sanskrit chants and cultural programs. Modi interacted with US President Joe Biden on the sidelines of the G20 summit. This is their first meeting since the US presidential election.
During a session of the summit, Modi emphasized the theme of last year's G20 summit in India, "One Earth, One Family, One Future". Modi highlighted the impact of global conflicts on food, fuel and fertiliser.
On Tuesday, Modi held bilateral meetings with leaders of countries including Brazil, Italy, Indonesia, Portugal, Norway, Chile, Argentina, Egypt and South Korea. Discussions were held on enhancing cooperation in defense, trade and technology sectors.
Modi discussed bilateral relations with Brazilian President Luiz Inacio Lula da Silva. Modi met French President Macron to discuss cooperation in the fields of space exploration, energy projects and artificial intelligence.
In his talks with UK Prime Minister Starmer, Modi expressed his desire to work closely in the fields of technology, green energy and defence. Starmer announced plans to resume trade talks with India in the coming year.
After extensive discussions between Modi and Italian Prime Minister Giorgia Meloni, India and Italy released the Strategic Action Plan for 2025-29. The plan emphasizes security, trade, and clean energy.
India and Australia have officially announced that they will work together to increase investment in renewable energy sectors. Aussie Prime Minister Anthony Albanese held talks with Modi.
Following the G20 Summit, Narendra Modi visited Guyana on the invitation of Guyana President Mohammad Irfan Ali. The tour will continue till November 21.
It is significant that an Indian Prime Minister will visit Guyana for the first time in 56 years. On his arrival in Guyana, Modi was received by President of Guyana Mohammed Irfan Ali, Prime Minister of Barbados Mia Amor Motley and Prime Minister of Grenada Dicken Mitchell.
Indian diaspora in Guyana also gave Modi a rousing welcome. As a testament to the close friendship between India and Guyana, the Mayor of Georgetown presented the key to the city of Georgetown to the Prime Minister.