18th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சத்தீஸ்கரில் நாட்டின் 56-வது புலிகள் காப்பகம் அறிவிப்பு
- சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள குரு காசிதாஸ் – தாமோர் பிங்லா புலிகள் காப்பகம், நாட்டின் 56-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இம்மாநிலத்தின் 6 மாவட்டங்களில் 2,829 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள குருகாசிதாஸ் - தாமோர் பிங்லா புலிகள் காப்பகம் நாட்டிலேயே மூன்றாவது பெரிய புலிகள் காப்பகம் ஆகும்.
- இந்தக் காப்பகம் மலைப்பகுதிகள், அடர்ந்த காடுகள், நீரோடைகள் மற்றும் ஆறுகளைக் கொண்டிருப்பதன் மூலம் பல்லுயிர் புகலிடமாகவும், புலிகளுக்கான முக்கியமான வாழ்விடமாகவும் திகழ்கிறது.
- மேலும் இந்தக் காப்பகத்தில், 388 முதுகெலும்புள்ள உயிரினங்களும், 365 முதுகெலும்பில்லாத உயிரினங்கள் என மொத்தம் 753 வகையான உயிரினங்கள் உள்ளன. முதுகெலும்புள்ள உயிரினங்களில் 230 வகையான பறவை இனங்களும், 55 வகையான பாலூட்டிகளும் அடங்கும்.
- இலங்கையில் அதிபர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் இடதுசாரி கட்சியான ஜேவிபி கூட்டணியுடன் களமிறங்கியது. நடைபெற்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் ஜேவிபி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
- அதில், அதிபர் வேட்பாளரான அநுர, அதிபராகத் தேர்வானார் மட்டுமல்லாது உடனடியாக நாடாளுமன்றத்திற்குமான தேர்தலையும் அறிவித்தார். மேலும், அவர் உடனடியாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
- இந்த உத்தரவைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது. அதிபர் அநுர எதிர்பார்த்ததைப் போலவே நாடாளுமன்றத் தேர்தலிலும் அவரது கட்சியே வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று இலங்கையின் புதிய பிரதமராகக் கலாநிதி ஹரிணி பதவி ஏற்றுக் கொண்டார்.
- இதன் மூலம், இலங்கையின் 3-வது பெண் பிரதமர் என்கிற பெருமையை ஹரிணி பெற்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து வரும் நவ.21ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அதிபர் அநுர உரையாற்ற இருக்கிறார் அதில் தனது அரசின் செயல் திட்டத்தையும் முன்மொழிய உள்ளார்.
- மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமாரை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
- மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார் சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
- மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் வரும் 21ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.