Type Here to Get Search Results !

16th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


16th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

நடப்பாண்டு உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 7.2ஆக இருக்கும் - மூடிஸ் ஆய்வறிக்கை
  • பணவீக்கம், கொரோனா தொற்று மற்றும் உக்ரைன்-ரஷ்யா போரால் பாதிக்கப்பட்டு இருந்த உலக பொருளாதாரம் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. 
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது.பணவீக்கம்நடப்பாண்டு உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 7.2ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. 
  • 2025ம் ஆண்டு இந்த வளர்ச்சி 6.6 சதவீதமாக குறையும். 2026ம் ஆண்டில் 6.5 சதவீதமாக குறையும். ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள பணவீக்க இலக்கை அடைய வேண்டும் என்றால் உணவு பொருட்கள் விலை குறைய வேண்டும். காய்கறி விலை அதிகரித்தது காரணமாக, அக்டோபர் மாதம் மொத்த பணவீக்கம் 6.2 சதவீதமாக உயர்ந்தது. 
ஜப்பான் அரசு மற்றும் இந்திய கடற்படை புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே இந்திய கடற்படையின் கப்பல்களில் பொருத்துவதற்காக யுனிகார்ன் கம்பத்தை இணைந்து உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நவம்பர் 15, 24 அன்று கையெழுத்தானது.
  • டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பானுக்கான இந்தியத் தூதர் திரு. சிபி ஜார்ஜ் மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கையகப்படுத்தல் தொழில்நுட்பம் மற்றும் தளவாட முகமையின் ஆணையர் திரு. இஷிகாவா தகேஷி ஆகியோர் டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர்.
  • ஒருங்கிணைந்த சிக்கலான ரேடியோ ஆண்டெனா (யூனிகார்ன்) என்பது ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு அமைப்புகளைக் கொண்ட ஒரு கம்பமாகும், இது கடற்படை கப்பல்களை மேம்படுத்த உதவும்.
  • இந்த மேம்பட்ட அமைப்புகளைச் சேர்ப்பதை இந்திய கடற்படை மேற்கொண்டு வருகிறது, இது ஜப்பானிய ஒத்துழைப்புடன் இந்தியாவில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து உருவாக்கும்.
  • இது செயல்படுத்தப்படும்போது, இந்தியா மற்றும் ஜப்பான் இடையே பாதுகாப்பு உபகரணங்களின் கூட்டு மேம்பாடு / கூட்டு உற்பத்தி நிகழ்வாக இது இருக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel