Type Here to Get Search Results !

15th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


15th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்
  • தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளைகளை போக்கும் பொருட்டு 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டம் முதற்கட்டமாக 2022-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. 
  • இதில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3% குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
  • இதன் தொடர்ச்சியாக இத்திட்டத்தின் 2 ஆம் கட்டத்தினை ரூ. 22 கோடி மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் வாரணவாசி குழந்தைகள் மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.
  • பிறந்தது முதல் 6 மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்கள் 15 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இத்திட்டத்தில் தற்போது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 0-6 மாதமுள்ள 76,705 குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
அரியலூரில் DeanShoes நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • அரியலூர் மாவட்டம், சிப்காட் ஜெயம்கொண்டம் தொழில் பூங்காவானது, உடையார்பாளளையம் தாலுகாவில் ஜெயம்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் அமைந்துள்ளது.
  • டீன்ஷூஸ் நிறுவனத்திற்கு சிப்காட் ஜெயம்கொண்டம் தொழில் பூங்காவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்நிறுவனம் தற்போது 1000 கோடி ரூபாய் முதலீட்டில், 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் லூப்ரிசால், பாலிஹோஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • தமிழ்நாட்டில் லூப்ரிசால், பாலிஹோஸ் ஆகிய மருந்துவ பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
  • அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் அரசுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மருத்துவத்துக்கு தேவையான உயர்தர குழாய்கள் மற்றும் மருந்துகளை இந்த இரு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தயாரிக்க உள்ளன.
  • நரம்பு மண்டலம், இதயத்தில் பயன்படுத்தக் கூடிய அதிநுட்ப - குழாய்களை பாலிஹோஸ் நிறுவனம் தயாரிக்கும்.
  • டயாலிசிஸ் சிகிச்சைக்கான குழாய்களையும் பாலிஹோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
பிஹாரில் ரூ. 6,640 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி
  • பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஜமுய் நகரில் நடைபெற்ற பழங்குடியினர் கவுரவ தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பிர்சா முண்டாவின் நினைவாக நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார். 
  • மேலும், பிரதமர் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM-JANMAN) எனும் திட்டத்தின் கீழ் பழங்குடியின குடும்பங்களுக்காக கட்டப்பட்ட 11,000 வீடுகளின் கிரஹ பிரவேச நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.
  • PM-JANMAN திட்டத்தின் கீழ் 23 நடமாடும் மருத்துவப் பிரிவுகளையும் (MMUs), தொலைதூர பழங்குடிப் பகுதிகளில் சுகாதார அணுகலை மேம்படுத்துவதற்காக Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan (DAJGUA) திட்டத்தின் கீழ் 30 கூடுதல் நடமாடும் மருத்துவப் பிரிவுகளையும் பிரதமர் தொடங்கிவைத்தார். 10 ஏகலவ்ய மாதிரி குடியிருப்புப் பள்ளிகளையும், 300 வளர்ச்சிக் கேந்திராக்களையும் அவர் திறந்து வைத்தார்.
  • பழங்குடியினர் பகுதிகளில் 500 கிமீ புதிய சாலைகள் மற்றும் 100 பல்நோக்கு மையங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர்-ஜன்மனின் கீழ் 25,000 புதிய வீடுகளுக்கும், DAJGUA-ன் கீழ் 1.16 லட்சம் வீடுகளுக்கும், பழங்குடியின மாணவர்களுக்கான 370 விடுதிகளுக்கும் மோடி அடிக்கல் நாட்டினார்.
ரஞ்சி கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹரியாணா வீரர் அன்ஷுல் காம்போஜ் சாதனை
  • குரூப்- சி பிரிவில் இடம்பெற்றுள்ள கேரளம், ஹரியாணா அணிகள் ரோதக்கில் உள்ள சௌதரி பன்ஷிலால் மைதானத்தில் விளையாடி வருகின்றன. 
  • இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கேரள அணி 116.1 ஓவர்களில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 30.1 ஓவர்கள் பந்துவீசிய அன்ஷுல் காம்போஜ் 49 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். 
  • ரஞ்சி கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் ஒருவர் 10 விக்கெட்டுகள் வீழ்த்துவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக, 1956 ஆம் ஆண்டில் அஸ்ஸாமுக்கு எதிராக பெங்கால் அணியின் பிரேமாங்ஷூ சட்டர்ஜி (10 விக்கெட்டுகள்/20 ரன்கள்), 1985 ஆம் ஆண்டில் விதர்பா அணிக்கு எதிராக ராஜஸ்தானின் பிரதீப் சுந்தரம் (10 விக்கெட்டுகள்/78 ரன்கள்) எடுத்துள்ளனர்.
  • முதல்தரப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தும் 6-வது வீரர் ஆவார். அவர்களைத் தவிர்த்து அனில் கும்ப்ளே, சுபாஷ் குப்தே மற்றும் தேபாஷிஷ் மொகந்தி ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel