Type Here to Get Search Results !

14th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

14th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தொழில் நிறுவனங்கள் இரட்டை அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கும் அறிவிக்கை வெளியீடு

  • புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் நிறுவுவதற்கான இசைவாணை ஆகிய இரட்டை இணக்கங்களை நீக்க வேண்டும் என்ற தொழில்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 
  • இப்போது, மாசுபடுத்தாத வெள்ளை வகைத் தொழில்கள் நிறுவுவதற்கான அனுமதி அல்லது செயல்பட ஒப்புதல் (CTO) எடுக்க வேண்டிய அவசியமில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் இசைவாணை எடுக்க வேண்டிய அவசியமில்லை. 
  • இது இணக்கச் சுமையை குறைப்பது மட்டுமல்லாமல், ஒப்புதல்கள் இரட்டிப்பாக்கப்படுவதையும் தடுக்கிறது. காற்று மாசுபாடு சட்டம் மற்றும் நீர் சட்டத்தின் கீழ், இது தொடர்பான அறிவிக்கைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிவிக்கை இந்த இரண்டு ஒப்புதல்களையும் திறம்பட ஒருங்கிணைப்பதுடன் இசைவாணை செயல்முறையின் போது கருத்தில் கொள்ளப்படும் பிரச்சினைகளை சுற்றுச்சூழல் அனுமதியிலேயே கணக்கில் எடுத்துக்கொள்வதற்கான நடைமுறை தரநிலையும் வெளியிடப்பட்டுள்ளது. 
  • சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறையின் போது, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் கலந்து ஆலோசிக்கப்படும். மேலும், மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படாத வகையில், இசைவாணைக் கட்டணத்தை தொழில்துறை செலுத்த வேண்டும்
பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது
  • COVID-19 தொற்றின்போது கடந்த 2021, பிப்ரவரியில் இந்தியா, டொமினிகாவுக்கு 70 ஆயிரம் டோஸ் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கியது. 
  • அதோடு, டொமினிகாவின் சுகாதரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா உதவிகளை அளித்தது.
  • இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
ங்கை நதி தூய்மைக்கான தேசிய இயக்கத்தின் 58-வது செயற்குழு கூட்டம்

  • கங்கை நதி தூய்மைக்கான தேசிய இயக்கத்தின்  58-வது செயற்குழு கூட்டம் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கூட்டத்திற்கு கங்கை நதி தூய்மைக்கான தேசிய இயக்கத்தின் தலைமை இயக்குநர் திரு. ராஜீவ் குமார் மிட்டல் தலைமை தாங்கினார். 
  • இந்தத் திட்டங்கள் கங்கை நதியையும் அதன் நீர்வாழ் உயிரினங்களையும் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • சம்பல், சோன், தாமோதர் மற்றும் டான்ஸ் நதிகளின் சுற்றுச்சூழல் பரவலை  மதிப்பிடுவதற்கான ஒரு முக்கிய திட்டத்திற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • ரூ.11 கோடி நிதி ஒதுக்கீட்டில், இந்த ஆறுகளின் சுற்றுச்சூழல் பரவலை மதிப்பீடு செய்வது மட்டுமல்லாமல், நீரோட்ட அமைப்புகளை அறிவியல் ரீதியாக மதிப்பீடு செய்ய உதவும் நீரியல் மற்றும் நீரியக்கவியல் மாதிரிகளை தயாரிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். 
  • கங்கை நதி டால்பினைப் பாதுகாக்க ஒரு லட்சிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 'தத்தளித்துக் கொண்டிருக்கும் கங்கை நதி டால்பின்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட மீட்பு அமைப்பு' என்ற தலைப்பிலான இத்திட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • ஆபத்தில் இருக்கும் டால்பின்களுக்கு உதவுவதற்காக 'டால்பின் ஆம்புலன்ஸ்' என்ற சிறப்பு மீட்பு வாகனத்தை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • கூடுதலாக, இந்தத் திட்டம் டால்பின் பாதுகாப்பு மற்றும் பயிற்சி மூலம் சமூகத் திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தும்.
  • உத்தரப்பிரதேசத்தில் கங்கைப் படுகையில் அழிந்து வரும் ஆமைகளைப் பாதுகாப்பதற்கான புதுமையான மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.78.09 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel