10th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
விருதுநகரில் ரூ.77 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- விருதுநகரில் ரூ.77 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் உட்பட்ட ரூ.101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
- அதன்பின் விருதுநகர் - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் உள்ள பட்டம்புதூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
- நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டு இருந்த வெம்பக்கோட்டை அகழாய்வு, ஶ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார்.
- நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர் கனவு இல்லம், புதுமை பெண், தமிழ் புதல்வன், கலைஞர் மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
- அப்போது விருதுநகர் மாவட்டத்துக்கு ரூ.603 கோடி மதிப்பிலான பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.