பிரதமரின் உள்ளகத் தொழில் பயிற்சித் திட்டம் / PM INTERNSHIP PROGRAM
TNPSCSHOUTERSOctober 25, 2024
0
பிரதமரின் உள்ளகத் தொழில் பயிற்சித் திட்டம் / PM INTERNSHIP PROGRAM: இன்றைய வேகமான பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான திறன்களுடன் இளைஞர்களை ஆயத்தப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா தீவிரமாக உணர்ந்து வருகிறது.
இந்த பார்வைக்கு ஏற்ப, பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் எனப்படும் பிரதமரின் உள்ளகத் தொழில் பழகுநர் பயிற்சித் திட்டம் 2023 அக்டோபர் 03 அன்று தொடங்கப்பட்டது.
இந்த லட்சிய முயற்சி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு மதிப்புமிக்க உள்ளகப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பல்வேறு வணிக சூழல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் பல்வேறு தொழில்களைத் தெரிந்து கொள்ளவும் அனுமதிக்கிறது.
2024-25-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. எண்ணெய், எரிவாயு, எரிசக்தி, விருந்தோம்பல், வாகனம், வங்கி, நிதி சேவைகள் உள்ளிட்ட 24 துறைகளில் உள்ளகப் பயிற்சி வாய்ப்புகள் உள்ளன.
இந்த முன்னோடித் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அவர்களின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) செலவினங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தற்போது செயல்படுத்தப்படும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், பயிற்சிகளிலுருந்து தனித்து இருப்பதே இந்தத் திட்டத்தை வேறுபடுத்துகிறது.
உள்ளகப்பயிற்சிகளில் (இன்டர்ன்ஷிப்) மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம், பிரதமரின் உள்ளகப் பயிற்சித் (இன்டர்ன்ஷிப்) திட்டம் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதும்.
இந்த முயற்சியின் மூலம், வேலை வாய்ப்புச் சந்தையில், திறமையான தொழிலாளர் சக்தியை வளர்ப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
தகுதி
பிரதமரின் உள்ளகத் தொழில் பயிற்சித் திட்டம் / PM INTERNSHIP PROGRAM: இத்திட்டம் 21 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்ட 12 மாத இன்டர்ன்ஷிப் பயிற்சியை வழங்குகிறது.
குறிப்பாக முழுநேர வேலையில் இல்லாத அல்லது முழுநேர கல்வியில் ஈடுபடாத இந்திய இளைஞர்களுக்கு இது பயன் அளிக்கும். ஆன்லைன் அல்லது தொலைதூர கல்வி படிப்புகளில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
2024 அக்டோபர் 12 முதல் பிரதமரின் உள்ளகப் பயிற்சிக்கான தளம் மூலம் உள்ளகப் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் 2024-25-ம் நிதியாண்டில் 1.25 லட்சம் உள்ளகப் பயிற்சிகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிதி உதவி
பிரதமரின் உள்ளகத் தொழில் பயிற்சித் திட்டம் / PM INTERNSHIP PROGRAM: பயிற்சியாளர்கள் உள்ளகப் பயிற்சிக் காலம் முழுவதும் மாதந்தோறும் ரூ. 5,000 உதவித்தொகையைப் பெறுவார்கள் .
கூடுதலாக, இன்டர்ன்ஷிப்பில் சேர்ந்த பிறகு ரூ. 6,000, நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் ஒரு முறை மானியம் வழங்கப்படும்.
பிரதமரின் உள்ளகப் பயிற்சி இணையதளம்
பிரதமரின் உள்ளகத் தொழில் பயிற்சித் திட்டம் / PM INTERNSHIP PROGRAM: பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் மையப்படுத்தப்பட்ட இணையதளம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பன்முகத்தன்மை, சமூக உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதை வலியுறுத்தி, நிறுவனத்தின் தேவைகளுடன் வேட்பாளர்களின் விருப்பங்களையும் கருத்தில் கொள்ளும் ஒரு செயல்முறையை தளம் எளிதாக்குகிறது.
இது எஸ்சி பிரிவினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
இன்டர்ன்ஷிப் எனப்படும் இந்த உள்ளகப் பயிற்சித் திட்டம் இளைஞர்களுக்கு நிதி ஆதரவையும் விரிவான பயிற்சி அனுபவத்தையும் வழங்குகிறது. இந்தியாவில் அடுத்த தலைமுறையினருக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ENGLISH
PM INTERNSHIP PROGRAM: India is acutely aware of the need to equip its youth with the necessary skills to excel in today's fast-paced economy. In line with this vision, the Prime Minister's Internship Program 2023 called the Prime Minister's Internship Program was launched on 03 October 2023.
This ambitious initiative aims to provide valuable internship opportunities to one crore youth over the next five years. This allows them to immerse themselves in different business environments and get to know different industries.
The scheme was announced in the Union Budget 2024-25. Internship opportunities are available in 24 sectors including Oil, Gas, Energy, Hospitality, Automotive, Banking, Financial Services.
Companies selected for this pilot program have been identified based on their corporate social responsibility (CSR) spending over the past three years.
What sets this program apart from the existing skill development programs and trainings implemented across all states and Union Territories of India. By focusing only on internships, the Prime Minister's Internship Program also promotes employability.
Through this initiative, the government aims to develop a skilled labor force in the job market.
Eligibility
PM INTERNSHIP PROGRAM: The program offers a 12-month internship designed for young people between the ages of 21 and 24. This will especially benefit Indian youth who are not in full-time employment or full-time education.
Candidates enrolled in online or distance education courses are eligible to apply. From 12th October 2024 you can apply for internships through Prime Minister's internship platform. The scheme aims to provide 1.25 lakh in-house trainings in the financial year 2024-25.
Financial Assistance
PM INTERNSHIP PROGRAM: The trainees will get a monthly allowance of Rs. 5,000 will get a scholarship.
Additionally, after joining the internship Rs. 6,000, will be given as one-time subsidy through direct cash transfer.
Prime Minister's Internship Website
PM INTERNSHIP PROGRAM: The Prime Minister's Internship Program is implemented through a centralized website. Eligible candidates need to register on the site.
The platform facilitates a process that considers candidates' preferences alongside the company's needs, with an emphasis on promoting diversity and social inclusion. It gives priority to SCs, Scheduled Tribes, Other Backward Classes, Persons with Disabilities.
This in-house training program known as internship provides financial support and extensive training experience to young people. This program is launched as a significant step towards empowering the next generation in India.