பிஎம் விரைவு சக்தி திட்டம் / PM GATI SHAKTI SCHEME
TNPSCSHOUTERSOctober 25, 2024
0
பிஎம் விரைவு சக்தி திட்டம் / PM GATI SHAKTI SCHEME: 75 வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது 'பிஎம் விரைவு சக்தி' முயற்சியை அறிவித்தார்.
2021, அக்டோபர் 13 அன்று தொடங்கப்பட்ட பலவகை இணைப்புக்கான தேசியப் பெருந்திட்டம் இன்று (2021, அக்டோபர் 13) அதன் மூன்றாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
இந்த டிஜிட்டல் தளம் ரயில்வே, சாலைப்போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களை ஒருங்கிணைத்து உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு போக்குவரத்து முறைகளில் மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கு தடையற்ற, திறமையான இணைப்பை வழங்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் தொலைதூர இணைப்பை மேம்படுத்துகிறது. பயண நேரத்தைக் குறைக்கிறது.
பாரத்மாலா, சாகர்மாலா, உள்நாட்டு நீர்வழிப்பாதைகள், சரக்குகள் ஏற்றும்/நில துறைமுகங்கள், உடான் போன்ற பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களை பிஎம் விரைவு சக்தி ஒருங்கிணைக்கிறது.
பிஎம் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டம், 44 மத்திய அமைச்சகங்கள் மற்றும் 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை இணைத்துள்ளது. மொத்தம் 1,614 தரவு அடுக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
தரவு துல்லியத்தை உறுதி செய்வதற்காக, முக்கிய உள்கட்டமைப்பு அமைச்சகங்கள் மூன்றடுக்கு அமைப்புக்கான நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) இறுதி செய்துள்ளன.
பிஎம் விரைவு சக்தியை மாவட்ட மட்டத்திற்கு விரிவுபடுத்த மாவட்டப் பெருந்திட்ட போர்ட்டல் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் போர்ட்டல் மாவட்ட அதிகாரிகளுக்கு கூட்டாகத் திட்டமிடல், உள்கட்டமைப்பு இடைவெளியை அடையாளம் காணுதல், திட்ட அமலாக்கம் ஆகியவற்றில் உதவும்.
இந்த போர்ட்டலின் பீட்டா பதிப்பு ஏற்கனவே 28 ஆர்வமுள்ள மாவட்டங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. 2024, செப்டம்பர் 18 அன்று இந்த மாவட்டங்களுக்கு பயனர் கணக்குகள் வழங்கப்பட்டன.
போர்ட்டலின் சோதனை ஓட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 2024 அக்டோபரில் நோக்குநிலை திட்டங்களுடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்டப் பெருந்திட்ட போர்ட்டல்கள் படிப்படியாக உருவாக்கப்பட்டு 2025, மார்ச் 31-க்குள் முடிக்கப்படும்.
ஒருங்கிணைந்த, திறமையான, செலவு குறைந்த தளவாட நெட்வொர்க்கை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை 2022, செப்டம்பர் 17 அன்று தொடங்கப்பட்டது.
சரக்குப் போக்குவரத்து செலவுகளைக் குறைப்பது, 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டு (எல்பிஐ) தரவரிசையை முதல் 25 நாடுகளில் ஒன்றாக மேம்படுத்துவது, தரவு சார்ந்து முடிவெடுப்பதை ஊக்குவிப்பது ஆகியவற்றை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விரைவு சக்தி சஞ்சார் போர்டல்
பிஎம் விரைவு சக்தி திட்டம் / PM GATI SHAKTI SCHEME: நாடு முழுவதும், குறிப்பாக கிராமப்புறங்களில் அகண்ட அலைவரிசை சேவைகளுக்கு உலகளாவிய மற்றும் சமமான அணுகல் பிரதமர் திரு நரேந்திர மோடியின் மிக முக்கியமான பார்வைகளில் ஒன்றாகும்.
பிஎம் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டத்திற்கு இணங்க, மையப்படுத்தப்பட்ட வழி உரிமை ஒப்புதல்களுக்காக "விரைவு சக்தி சஞ்சார்" போர்ட்டல் 2022, மே 14 அன்று தொடங்கப்பட்டது.
விரைவு சக்தி சஞ்சார் போர்ட்டல் என்பது தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பை விரைந்து உருவாக்க உதவும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒரு பெரிய சீர்திருத்தமாகும். இது ஒரு மையப்படுத்தப்பட்ட வழி உரிமை போர்ட்டல் ஆகும்.
இது தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள்/உள்கட்டமைப்பு வழங்குநர்கள் / இணைய சேவை வழங்குநர்கள் போன்ற விண்ணப்பதாரர்களுக்கு வழி உரிமை ஒப்புதல்களுக்கு விண்ணப்பிக்க உதவுகிறது. 2024, அக்டோபர் 11 நிலவரப்படி, 2.11 லட்சம் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த இணையதளம் அனைத்து 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடனும் தொடர்புடைய ரயில்வே அமைச்சகம், சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகிய மத்திய அமைச்சகங்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவைகள் 2022, அக்டோபர் 1 அன்று தொடங்கப்பட்டன. 13 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் 5 ஜி சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இது உலகில் எங்கும் இல்லாத 5 ஜி-ன் விரைவான வெளியீடாகும். நாட்டில் தொலைத்தொடர்பு இணைப்பை மேலும் மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சுமார் 55 ஆயிரம் கிராமங்களுக்கு 4ஜி இணைப்பை வழங்க ரூ.41,331 கோடி செலவில் மொத்தம் 41,160 மொபைல் கோபுரங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிஎம் விரைவு சக்தி முன்முயற்சி இந்தியாவில் உள்கட்டமைப்பு வளர்ச்சி மாற்றம்பெறும் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. இது தடையற்ற, திறமையான பலவகைப் போக்குவரத்து வலையமைப்பு உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல்வேறு அமைச்சகங்களின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலமும், தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலமும், நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்தவும், சரக்குப் போக்குவரத்து செலவுகளைக் குறைக்கவும் இது முயற்சி செய்கிறது.
ENGLISH
PM GATI SHAKTI SCHEME: On the 75th Independence Day, Prime Minister Narendra Modi announced the 'PM Gati Shakti' initiative while addressing the nation from the Red Fort. Launched on October 13, 2021, the National Master Plan for Multimodal Connectivity celebrates its third anniversary today (October 13, 2021).
This digital platform is designed to integrate various ministries including Railways, Road Transport and ensure implementation of infrastructure projects.
The initiative aims to provide seamless, efficient connectivity for the movement of people, goods and services across various modes of transport. thereby improving remote connectivity. Reduces travel time.
PM Gati Shakti coordinates infrastructure projects of various Ministries and State Governments like Bharatmala, Sagarmala, Inland Waterways, Cargo Loading/Land Ports, Udon.
The PM Gati Shakti National Master Plan has incorporated 44 Union Ministries and 36 States / Union Territories. A total of 1,614 data plots were aggregated. To ensure data accuracy, key infrastructure ministries have finalized standard operating procedures (SOPs) for the three-tier system.
A district-wide portal is being developed to extend the BM Rapid Power to the district level. The portal will help district authorities in collaborative planning, infrastructure gap identification and project implementation.
A beta version of this portal has already been developed for 28 interested districts. 2024, user accounts were issued to these districts on 18th September. Trial runs of the portal are ongoing.
District-wide portals for all districts of the country will be developed in a phased manner and will be completed by March 31, 2025, with orientation projects in October 2024.
The National Freight Policy 2022 was launched on September 17 to boost India's economic growth by creating an integrated, efficient and cost-effective logistics network.
The policy aims to reduce freight costs, improve India's Freight Performance Index (LPI) ranking to one of the top 25 countries by 2030, and promote data-driven decision-making.
PM Gati Shakti Travel Portal
PM GATI SHAKTI SCHEME: Universal and equitable access to broadband services across the country, especially in rural areas, is one of the most important visions of Prime Minister Shri Narendra Modi.
In line with PM Gati Shakti National Master Plan, "PM Gati Shakti Sanchar" portal for centralized right-of-way approvals was launched on May 14, 2022.
The Rapid Shakti Sanchar Portal is a major reform brought in to help speed up the development of telecommunication infrastructure. It is a centralized way ownership portal.
It helps applicants like Telecom Service Providers / Infrastructure Providers / Internet Service Providers to apply for right of way approvals. 2024, as on October 11, 2.11 lakh applications have been approved.
The website is integrated with all the 36 states/UTs concerned with the Union Ministries namely Ministry of Railways, Ministry of Roads, Transport and Highways, Ministry of Environment, Forest and Climate Change and Ministry of Defence.
5G services in India launched on October 1, 2022. More than 13 crore subscribers have started using 5G services, the fastest rollout of 5G anywhere in the world. The government is implementing various schemes to further improve telecommunication connectivity in the country.
A total of 41,160 mobile towers have been approved at a cost of Rs 41,331 crore to provide 4G connectivity to around 55,000 villages.
The PM Gati Shakti Initiative reflects a changing approach to infrastructure development in India. It aims to create a seamless, efficient multi-modal transport network.
It strives to improve connectivity across the country and reduce freight costs by consolidating the efforts of various ministries and improving technologies.