
9th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மகாராஷ்டிராவில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
- மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.10.2024) காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
- நாக்பூரில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலைய மேம்பாட்டுக்கு அடிக்கல் நாட்டுதல், ஷீரடி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடம் ஆகியவை இன்று மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளில் அடங்கும்.
- மகாராஷ்டிராவில் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்த திரு நரேந்திர மோடி, மும்பையில் இந்திய திறன் நிறுவனத்தையும், மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி ஆராய்ச்சி மையத்தையும் தொடங்கி வைத்தார்.
- 2024 அக்டோபர் 06 முதல் 18 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்திய, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க கடற்படைகளின் கூட்டு பன்னாட்டு கடல்சார் பயிற்சியான இப்சாமரின் எட்டாவது பதிப்பில் பங்கேற்க, இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பல், ஐஎன்எஸ் தல்வார் 06 அக்டோபர் 24 அன்று தென்னாப்பிரிக்காவின் சைமன் டவுனுக்கு சென்றடைந்தது.
- இந்த பயிற்சி மூன்று கடற்படைகளுக்கு இடையிலான இயங்குதன்மையை மேம்படுத்துவதையும், ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- துறைமுக கட்டத்தில் நடைபெறும் இப்பயிற்சியில் தொழில்முறை பரிமாற்றங்கள், சேதக் கட்டுப்பாடு மற்றும் தீயணைப்பு பயிற்சிகள், தேடல் மற்றும் பறிமுதல் பயிற்சிகள், குறுக்கு போர்டிங், விமான பாதுகாப்பு விரிவுரைகள், கூட்டு நீர்மூழ்கி நடவடிக்கைகள், பெருங்கடல் ஆளுமை கருத்தரங்கு, விளையாட்டு தொடர்புகள், சிறப்புப் படைகள் மற்றும் இளநிலை அதிகாரிகளிடையே கலந்துரையாடல் ஆகியவை அடங்கும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில், உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.4,406 கோடி முதலீட்டில் 2,280 கிலோமீட்டர் சாலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- நாட்டின் பிற பகுதிகளைப் போல, அனைத்து வசதிகளுடன் எல்லைப் பகுதிகளை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, குஜராத் மாநிலம் லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படும்.
- தன்னார்வ ஆதாரங்கள்/பங்களிப்புகள் வழியாக நிதி திரட்டுவதன் மூலமும், நிதி திரட்டிய பின்னர் அவற்றை செயல்படுத்துவதன் மூலமும், பெருந்திட்டத்தின் படி, கட்டம் 1 பி மற்றும் கட்டம் 2 க்கு அமைச்சரவை கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது.
- கட்டம் 1 பி-யின் கீழ் கலங்கரை விளக்க அருங்காட்சியகம் கட்டுவதற்கு கலங்கரை விளக்கங்கள் இயக்குநரகம் நிதியுதவி அளிக்கும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டம் மற்றும் இதர நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்து திட்டங்களின் கீழும் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை அதன் தற்போதைய வடிவத்தில் ஜூலை 2024 முதல் டிசம்பர் 2028 வரை தொடர ஒப்புதல் அளித்தது.
- அரிசி செறிவூட்டும் முன்முயற்சி, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டத்தின் (உணவு மானியம்) ஒரு பகுதியாக மத்திய அரசின் 100% நிதியுதவியுடன் ஒரு மத்திய அரசின் முயற்சியாக தொடரும்.
- அரிசி செறிவூட்டல் என்பது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரங்களின்படி, இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி 12 போன்ற நுண்ணூட்டச்சத்துக்களை வழக்கமான அரிசியில் செறிவூட்டுவதாகும்.