Type Here to Get Search Results !

7th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


7th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் மோடி சந்திப்பு
  • மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று (அக்.6) இந்தியா வந்தார். அதனை தொடர்ந்து மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.
  • இதனைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று காலை (அக்.7) மரியாதை செலுத்தினார். 
  • பின்னர் அவர் அங்கிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார். அங்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் முகமது மூயிஸை வரவேற்றனர். தொடர்ந்து, அவருக்கு அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.
  • இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 
  • இந்த பேச்சுவார்த்தையில் மாலத்தீவுக்கான கடனுதவி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமா் மோடியுடன் மூயீஸ் ஆலோசித்ததாக தெரிகிறது. இப்பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இடதுசாரி தீவிரவாதம் குறித்த ஆய்வுக் கூட்டம்
  • இடதுசாரி தீவிரவாதம் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. 
  • சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா முதலமைச்சர்கள், பீகார் துணை முதலமைச்சர், ஆந்திரப் பிரதேச உள்துறை அமைச்சர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். 
  • இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த மாநிலங்களுடன் ஒத்துழைக்கும் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தின் போது பங்கேற்றனர். 
  • மத்திய உள்துறை செயலாளர், புலனாய்வு பணியக இயக்குநர், துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய ஆயுத காவல் படைகள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel