
5th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
- பிரதமர் மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக மராட்டிய மாநிலத்திற்கு சென்றுள்ளார். பஞ்சாரா சமூகத்தினரின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பஞ்சாரா விராசத்த் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 9.4 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.
- தொடர்ந்து நமோ ஷேத்காரி மகாசன்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். மேலும் ரூ.1,920 கோடி மதிப்பிலான 7,500-க்கும் மேற்பட்ட விவசாய உள்கட்டமைப்பு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
- அதோடு 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும் மராட்டிய மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 19 மெகாவாட் திறன் கொண்ட 5 சோலார் பூங்காக்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- 2024 ரஞ்சிக் கோப்பை சாம்பியனான மும்பை அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையேயான இரானி கோப்பை போட்டியானது லக்னோவில் நடைபெற்றது.
- முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 537 ரன்களை மும்பை அணி குவித்தது. சர்பராஸ் கான் 222* ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- முதல் இன்னிங்ஸை விளையாடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
- இரண்டாம் இன்னிங்ஸில் மும்பை அணி 316/8 என்ற நிலையில் இருந்ததால் போட்டி சமனில் முடிந்தது.இரானி கோப்பை போட்டி சமனில் முடிந்தபோதும் முதல் இன்னிங்ஸில் லீட் எடுத்ததால் மும்பை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
- இதன்மூலம் மும்பை 27 வருடங்களுக்கு பிறகு இரானி கோப்பையை வென்று அசத்தியது. அவர்கள் கடைசியாக 1997-1998 இரானி கோப்பையை வென்றிருந்தனர். இரட்டை சதமடித்த (222* ரன்கள்) சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.