24th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (24.10.2024) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
- மேலும் இத்திட்டத்தின் இலச்சினையினை வெளியிட்டு, இணையவழி முன்பதிவிற்காக www.trektamilnadu.com என்ற பிரத்யோக வலைதளத்தையும் தொடங்கி வைத்தார்.
- இத்திட்டம் தமிழ்நாட்டின் வனம் மற்றும் வன உயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை ஒரு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் (TNWEC) மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் (TNFD) கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
- உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நவம்பர் 11ஆம் தேதி சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்கவுள்ளார்.
- தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சந்திரசூட் ஓய்வு பெற்ற அடுத்தநாள் சஞ்சீவ் கன்னா பதவியேற்கிறார்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் கீழ் விண்வெளித் துறைக்கு ரூ. 1,000 கோடி தனியார் கூட்டு மூலதனத்தை நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது.
- ரூ. 1,000 கோடி உத்தேச தனியார் கூட்டு மூலதனத்திற்கான இந்த நிதியத்தின் செயல்பாட்டுக் கால அளவு செயல்பாடு தொடங்கிய தேதியிலிருந்து ஐந்தாண்டுகள் ஆகும். முதலீட்டு வாய்ப்புகளையும் நிதித் தேவையையும் பொறுத்து நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ரூ. 150 முதல் 250 கோடி வரை இருக்கும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 6,798 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் இரண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- நர்கட்டியாகஞ்ச் – ரக்சவுல் – சீதாமர்ஹி – தர்பங்கா மற்றும் சீதாமர்ஹி – முசாபர்பூர் பிரிவை இரட்டை ரயில் பாதைகளாக மாற்றுவதும் நேபாளம், வடகிழக்கு இந்தியா மற்றும் எல்லைப் பகுதிகளுக்கான இணைப்பை வலுப்படுத்துவதுடன்சரக்கு ரயில்களுடன் பயணிகள் ரயில்களின் இயக்கத்தையும் எளிதாக்குவது என்பது இப்பகுதியின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
- எருபாலம்-அமராவதி-நம்பூரு என்ற புதிய ரயில் பாதை திட்டம் ஆந்திராவின் என்.டி.ஆர் விஜயவாடா மற்றும் குண்டூர் மாவட்டங்கள் மற்றும் தெலுங்கானாவின் கம்மம் மாவட்டம் வழியாக செல்கிறது.
- ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, பீகார் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த இரண்டு திட்டங்கள், தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் கட்டமைப்பை சுமார் 313 கிலோ மீட்டர் அளவுக்கு அதிகரிக்கும்.
- 31-வது சிங்கப்பூர் இந்தியா கடல்சார் இருதரப்பு பயிற்சி 2024 அக்டோபர் 23 முதல் 29 வரை விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளத்தில் நடத்தப்படுகிறது.
- சிங்கப்பூர் குடியரசின் கடற்படைக் கப்பல் ஆர்.எஸ்.எஸ் டெனாசியஸ் ஹெலிகாப்டருடன் பங்கேற்பதற்காக அக்டோபர் 2024 23 அன்று விசாகப்பட்டினம் வந்தடைந்தது.
- 1994-ம் ஆண்டில் 'எக்சர்சைஸ் லயன் கிங்' என்று தொடங்கப்பட்ட கூட்டுப்பயிற்சியானது இந்திய கடற்படைக்கும் சிங்கப்பூர் குடியரசு கடற்படைக்கும் இடையிலான மிக முக்கியமான இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
- இந்த பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் - அக்டோபர் 23 முதல் 25 வரை விசாகப்பட்டினத்தில் துறைமுக பகுதியிலும், வங்காள விரிகுடாவில் அக்டோபர் 28 முதல் 29 வரை கடல் பகுதியிலும் நடைபெற உள்ளது.
- இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் தில்லி, ஜெர்மன் கடற்படையின் போர்க்கப்பல் பாடன்-வூர்ட்டம்பெர்க் மற்றும் டேங்கர் பிராங்க்பர்ட் ஆம் மெய்ன் ஆகியவை இந்தியப் பெருங்கடலில் கடல்சார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டன.
- வங்காள விரிகுடாவில் முதல் இந்திய-ஜெர்மன் கடல்சார் கூட்டுப் பயிற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் தொடர்பை மேலும் வலுப்படுத்துவதையும், கடற்படைகளுக்கு இடையிலான இயங்குதன்மையையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஐ.என்.எஸ் தில்லி கப்பல் ஏவுகணை அழிப்பு முன்னணி கப்பலாக விளங்குகிறது.