23rd OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தொழில்துறையில் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலை ஒழுங்குபடுத்தவும், வரி விதிக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- தொழிலக பயன்பாட்டு ஆல்கஹால் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்தது.
- இந்நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், அபய் எஸ், பிவி நாகரத்னா, பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகிய 9 பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது.
- தொழில்துறையில் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலை ஒழுங்குபடுத்தவும், வரி விதிக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் 9 பேர் அடங்கிய அமர்வில் 8 பேர் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு அளித்தனர்.
- நீதிபதிகள் கூறியதாவது தொழிலக ஆல்கஹால் பயன்பாடு தொடர்பான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கே உரிமை உள்ளது. இதுபோன்ற அதிகாரங்களை மாநில அரசிடம் இருந்து பறிக்க முடியாது.
- தொழிலக ஆல்கஹால் மீது வரி விதிக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். தொழிலக ஆல்கஹால் தயாரிப்பு குறித்த மாநில அரசுகளின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
- இந்தியா, பிரேஸில், ரஷியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் 16-ஆவது உச்ச மாநாடு ரஷியாவின் கசான் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
- 'உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' கருப்பொருளில் இந்த உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
- இதில் பங்கேற்பதற்காக ரஷியா சென்ற பிரதமா் மோடி, கசான் நகரில் 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு தொடங்குவதற்கு முன்பாக அதிபா் புதினை சந்தித்து, இருதரப்பு உறவு மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் உலகத் தலைவர்களிடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகமே, போர், மோதல்கள், பொருளாதார நிலையற்றத் தன்மை, வானிலை மாற்றம், பயங்கரவாதம் போன்றவற்றால் சூழப்பட்டிருக்கும் நிலையில், இந்த மாநாடு கூடியிருக்கிறது.
- தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், சைபர் பாதுகாப்பு, தவறான தகவல்கள் பரப்புதல் போன்றவையும் அதிகரித்துள்ளன. இதனால், பிரிக்ஸ் மாநாட்டின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்றும் கூறினார்.
- மேலும் அவர் பேசுகையில், பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுதலுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும், மிகவும் கவலைதரும் விஷயமான பயங்கரவாதத்துக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு என்பதே இருக்க முடியாது என்று மோடி கூறினார்.