
22nd OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
3ம் கட்ட வெம்பக்கோட்டை அகழாய்வில் மணி, காதணி மற்றும் சங்கு வளையல் கண்டெடுப்பு
- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் கடந்த ஜூன் 18-ம் தேதி 3-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது.
- இந்த அகழாய்வு பணியில் இதுவரை கண்ணாடி மணிகள், கல்மணிகள், சூது பவள கல் மணிகள், முழுமையான சங்கு வளையல், பழங்கால சிகை அலங்காரத்துடன் கூடிய பெண்ணின் தலைப்பகுதி, கி.பி 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால செப்புக் காசு, அணிகலன்கள், திமிலுடன் கூடிய காளை உருவ பொம்மை உள்ளிட்ட 1,800க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.
- இந்நிலையில், தற்போது சுடுமண்ணால் ஆன மணி, காதணி, சங்கு வளையல் உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்ட்டுள்ளது. இதன் மூலம் முன்னோர்கள் அலங்கரிக்கப்பட்ட அணிகலன்களை கைகளால் தயாரித்து அணிந்துள்ளது தெரிய வந்துள்ளது என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அகழாய்வில் இதுவரை 2,395 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் முன்னிலையில் வடகிழக்கு பிராந்தியத்தின் தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம்.சிந்தியா இன்று போலி சர்வதேச அழைப்புகள் தடுப்பு அமைப்பு என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- சமீப காலமாக, இணைய குற்றவாளிகள் இந்திய மொபைல் எண்களை (+91-xxxxx) காண்பித்து சர்வதேச ஏமாற்று அழைப்புகளை மேற்கொள்வதன் மூலம் இணைய குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இந்த அழைப்புகள் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டதாக தோன்றினாலும், வெளிநாட்டிலிருந்து அழைக்கப்படுகிறது. இந்த போலி அழைப்புகள் நிதி மோசடிகள், அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் பயத்தை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
- இதுபோன்ற வரும் போலி சர்வதேச அழைப்புகளை இந்திய தொலைத் தொடர்பு சந்தாதாரர்களை அடைவதைத் தடுக்க தகவல் தொடர்புத் துறை (டிஓடி) மற்றும் தொலைத்தொடர்பு சேவை (டிஎஸ்பி) இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளன.
- இந்த அமைப்பு செயல்பாட்டுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள், இந்திய தொலைபேசி எண்களுடன் வரும் அனைத்து சர்வதேச அழைப்புகளிலிருந்தும் சுமார் 1.35 கோடி அல்லது 90% போலி அழைப்புகள் என அடையாளம் காணப்பட்டு, இந்திய தொலைத் தொடர்பு சந்தாதாரர்களை அடைவதில் இருந்து தடுக்கப்பட்டது.
- இதுபோன்ற அழைப்புகளுக்கு, சஞ்சார் சாத்தி (www.sancharsaasthi,gov.in) என்ற இணையதளத்தில் சந்தேகத்திற்குரிய மோசடி தகவல்தொடர்புகளைப் புகாரளிப்பதன் மூலம் உதவலாம்.