
15th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
- புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ஐடியு) – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- இந்த நிகழ்ச்சியின் போது இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் 8 வது பதிப்பையும் திரு மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.
- உலக விண்வெளி விருது வழங்கும் விழா இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் நடந்தது. இதில் சந்திரயான் 3 பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சந்திரனின் தென்துருவத்துக்கு அருகே தரையிறங்கிய முதல் வரலாற்று சாதனையை குறிக்கும் வகையிலும் வேர்ல்ட் ஸ்பேஸ் விருதை வழங்கி கவுரவித்தது. இந்த விருதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெற்றுக்கொண்டார்.