14th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவா் ஆட்சி வாபஸ்
- ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு பொறுப்பேற்க வழி வகுக்கும் வகையில் அங்கு 5 ஆண்டுகளாக அமலில் இருந்த குடியரசுத் தலைவா் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது.
- இதற்கான அரசிதழ் அறிவிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
- குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கையொப்பமிட்ட அந்த அறிவிக்கையில், 'ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தின் 73-ஆவது பிரிவில் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, யூனியன் பிரதேசத்தில் அமலில் இருக்கும் குடியரசுத் தலைவா் ஆட்சி ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தின் 54-ஆவது பிரிவின்கீழ் முதல்வா் நியமிக்கப்படுவதற்கு முன் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆகஸ்ட் மாதத்தில் 1.31 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்க விகிதம் செப்டம்பரில் 0.53% அதிகரித்து 1.84% ஆக உயர்ந்துள்ளது. ஆகஸ்டில் 3.11 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் 11.53% ஆக அதிகரித்துள்ளது.
- வெங்காயம், காய்கறிகள், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை ஆகஸ்டை விட செப்டம்பரில் கடுமையாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களுடன் ஆலை உற்பத்திப் பொருட்களின் விலையும் உயர்ந்ததால் பணவீக்க விகிதம் செப்டம்பரில் அதிகரித்துள்ளது.