13th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு 'மகாரத்னா' அந்தஸ்து
- எச்.ஏ.எல்., என்பது பாதுகாப்பு உற்பத்தி துறைக்கான மத்திய பொதுத்துறை நிறுவனமாகும்.
- இந்நிறுவனத்தை மகாரத்னா நிறுவனமாக தரம் உயர்த்துவதற்கான முன்மொழிவை, நிதிச் செயலர் தலைமையிலான அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவும், மத்திய அமைச்சரவை செயலர் தலைமையிலான உயர்நிலைக் குழுவும் பரிந்துரை செய்திருந்தது.
- இதையடுத்து மத்திய நிதியமைச்சர் ஒப்புதல் அளித்த நிலையில், மகாரத்னா அந்தஸ்து பெற்ற 14வது நிறுவனமானதாக, பொதுத் துறை நிறுவனங்கள் அமைச்சகம் தன் எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவித்தது.