54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54-வது கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், கோவா மற்றும் மேகாலயா மாநிலங்களின் துணை முதல்வர்களும், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் நிதியமைச்சர்களும், மத்திய மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
- அதாவது ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைக்கு இப்போதைக்கு 18% வரி இல்லை என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தணைக்கு 18% வரிவிதிக்க வேண்டும் என்ற முன்மொழிவு குறித்து மேலும் விரிவாக ஆலோசிக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் பிட்பமண்ட் ( fitment) கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.
- இதேபோல் மத கரணங்களுக்காக இயக்கப்படும் ஹெலிகாப்டர்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- அதேபோல, மருத்துவக் காப்பீடு தவணைக் கட்டணம் மீதான ஜிஎஸ்டியை குறைத்தல் அல்லது அந்த ஜிஎஸ்டியை செலுத்துவதில் இருந்து மூத்த குடிமக்கள் போன்றவா்களுக்கு விலக்களிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- யுத் அப்யாஸ் -2024 எனும் இந்தியா- அமெரிக்கா இடையேயான 20-வது கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் தொடங்கியது.
- இந்தப் பயிற்சி செப்டம்பர் 22 வரை நடைபெறும். 2004 முதல் இந்தியாவிலும், அமெரிக்காவிலுமாக ஆண்டுதோறும் இப்பயிற்சி மாறி மாறி நடைபெறுகிறது.
- இந்தப் பயிற்சியில் இந்திய தரப்பில் இருந்து ராஜ்புத் படைப்பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 600 ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க ராணுவத்தின் அலாஸ்காவைச் சேர்ந்த படைப்பிரிவுகளின் 600 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
- ஐ நா சபை சாசனத்தில் 7-வது பிரிவின் கீழ், பயங்கர வாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருதரப்பு கூட்டு ராணுவ திறன்களை அதிகரிப்பது இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
- தற்சார்பு இந்தியாவுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பாதுகாப்பு அமைச்சகம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உடன் ரூ .26,000 கோடிக்கும் அதிகமான செலவில் எஸ்யு -30 எம்கேஐ விமானங்களுக்கான 240 ஏஎல் -31 எஃப்பி ஏரோ என்ஜின்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- செப்டம்பர் 09, 2024 அன்று புதுதில்லியில் பாதுகாப்புத் துறை செயலாளர் திரு கிரிதர் அரமனே, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் எச்ஏஎல் மூத்த அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- இந்த ஏரோஎன்ஜின்கள் எச்ஏஎல்-ன் கோராபுட் பிரிவால் தயாரிக்கப்படும். மேலும் நாட்டின் பாதுகாப்பு தயார்நிலைக்காக எஸ்யு -30 கடற்படையின் செயல்பாட்டு திறனைத் தக்கவைக்க இந்திய விமானப்படையின் தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒப்பந்த கால அட்டவணையின்படி ஆண்டுக்கு 30 ஏரோ என்ஜின்களை எச்ஏஎல் வழங்கும் . அனைத்து 240 என்ஜின்களின் சப்ளை அடுத்த எட்டு ஆண்டுகளில் நிறைவடையும்.
- இந்திய ஆட்சிப்பணியின், ஒடிசா கேடரின் 1987 தொகுதி அதிகாரியான திரு ராஜேஷ் வர்மா, தலைநகர் தில்லி பிராந்தியம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் புதிய முழுநேர தலைவராக இன்று பொறுப்பேற்றார்.
- திரு. வர்மா பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டு காலத்திற்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை, இதில் எது முந்தையதோ அந்தக் காலம் வரை பணியில் இருப்பார். பொது நிர்வாகத்தில் மூன்றரை தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமும், நிபுணத்துவமும் கொண்டவர் ஆவார் அவர்.