பாரிஸ் பாராலிம்பிக் 2024 - 10வது நாள்
- பாரிஸ் பாராலிம்பிக் 2024-ல் ஆண்கள் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் இந்தியாவின் பாரா-தடகள வீரர் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவரது செயல்திறன் தேசத்திற்கு மிகுந்த பெருமையை அளித்துள்ளது.
- டோக்கியோ பாராலிம்பிக் 2020-ல் ஆண்கள் உயரம் தாண்டுதல் டி 42-ல் வெண்கலப் பதக்கம், 2019, 2017 ஆம் ஆண்டுகளில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கங்கள், 2018, 2014-ம் ஆண்டுகளில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் ஆகியவை அவரது முக்கிய சாதனைகளில் சிலவாகும். மலேசிய ஓபன் பாரா தடகள சாம்பியன்ஷிப்பிலும் அவர் தங்கப் பதக்கம் வென்றார்.