6th SEPTEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
3 நிறுவனங்களுடன் ரூ.850 கோடி முதலீட்டிற்கான தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
- வெல்டிங் பொருட்கள், ஆர்க் வெல்டிங் உபகரணங்கள், வெல்டிங் பாகங்கள், பிளாஸ்மா மற்றும் ஆக்ஸி-எரிபொருள் வெட்டும் உபகரணங்கள், ரோபோடிக் வெல்டிங் பொருட்களின் உலகளாவிய உற்பத்தி நிறுவனம் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம்.
- முதல்வர் முன்னிலையில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.500 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- விஷய் பிரிஷிஷன் நிறுவனத்துடன் ரூ. 100 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், விஸ்டியன் நிறுவனத்துடன் ரூ.250 கோடி முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், என மொத்தம் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
- குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.
- இந்தத் திட்டத்தின் கீழ், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்டகால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
- ஆண்கள் பாரா ஜூடோவில் 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் கபில் பர்மார், பிரேசிலின் எலிடன் டி ஒலிவெய்ராவை எதிர்கொண்டார். இதில் கபில் பர்மார் 10க்கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இது பாராலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் ஜூடோவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் ஆகும்.
- ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் டி-64 பிரிவில் இந்திய வீரர் பிரவீன் குமார் பங்கேற்றார். இவர் இலக்கை விட கூடுதலாகச் சென்று 2.08 மீட்டர் உயரம் தாண்டினார். இது புதிய ஆசிய சாதனையாகவும் மாறியுள்ளது.
- சரத் குமார், மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் ஏற்கெனவே பதக்கங்களை வென்றுள்ள நிலையில், பிரவீன் குமார் மூலம் 3வது பதக்கம் கிடைத்துள்ளது.
- தற்போதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் உள்பட 26 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
- நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 34-வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார்.
- இதன் மூலம் கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ரொனால்டோ. கால்பந்து வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்தியவர் ரொனால்டோ மட்டுமே.
- இவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி 838 கோல் அடித்து 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) இந்தியா ஆகியவை அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், சமூக மாற்றத்திற்காக சமூகங்களை ஈடுபடுத்துவதற்கும் ஒத்துழைக்க ஒரு நோக்க ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் களப்பணியாளர்கள் மற்றும் ஊரக சமுதாயங்கள் இடையே பயனுள்ள தகவல் தொடர்புக்கான வழிமுறைகளை அமைத்து நிறுவனமயமாக்குவதை இந்த கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.