குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுப்ரீம் கோர்ட்டின் கொடியை அறிமுகம் செய்தார்
- நமது நாட்டில் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அதை நினைவுகூரும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் புதிய கொடி மற்றும் சின்னத்தை நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டார்.
- அசோக சக்கரம், உச்ச நீதிமன்ற கட்டிடம் மற்றும் இந்திய அரசியலமைப்பு ஆகியவற்றுடன் நீல நிறத்தில் உச்ச நீதிமன்றத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட பல நீதிபதிகள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பெண்களுக்கான பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தலைமையின் கீழ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், 2024, ஆகஸ்ட் 29 அன்று புதிய SHe-Box தளத்தை அறிமுகப்படுத்தியது.
- பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் பதிவு மற்றும் கண்காணிப்பை ஒழுங்குபடுத்த மையப்படுத்தப்பட்ட தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- புதுதில்லியில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில், அமைச்சகத்திற்கான புதிய வலைத்தளம் வெளியிடப்பட்டது. இவை இரண்டும் பொதுமக்களுடன் அரசின் டிஜிட்டல் ஈடுபாட்டை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த நிதியாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.59 லட்சம் கோடியாகும். இது நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
- கடந்த ஆகஸ்டில் சரக்குகள் இறக்குமதி மூலம் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 12.1 சதவீதம் அதிகரித்து ரூ.49,976 கோடியாக உயா்ந்துள்ளது. அந்த மாதம் வரிப் பிடித்தத்துக்குப் பிறகு ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு ரூ.24,460 கோடி திருப்பி அளிக்கப்பட்டது.
- இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் திருப்பி அளிக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் 38 சதவீதம் அதிகம். திருப்பி அளிக்கப்பட்ட தொகையைக் கழித்த பின்னா், நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடியாக உள்ளது.
- அந்நிய செலாவணி இருப்புக்கள் என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி அல்லது நாணய அதிகாரம் வைத்திருக்கும் சொத்துக்கள், பொதுவாக அமெரிக்க டாலர், யூரோ, ஜப்பானிய யென் மற்றும் பவுண்ட் ஸ்டெர்லிங் போன்ற இருப்பு நாணயங்கள் ஆகும்.
- உலகப் பொருளாதார அதிர்ச்சிகளுக்கு எதிராக உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அவை பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகின்றன.
- தற்போதைய மதிப்பீடுகள், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தோராயமாக ஒரு வருடத்திற்கு திட்டமிடப்பட்ட இறக்குமதிகளை ஈடுகட்ட போதுமானது என்பதைக் குறிக்கிறது.
- கூடுதலாக, அந்நிய செலாவணி கையிருப்பில் மிகப்பெரிய பகுதியைக் கொண்ட இந்தியாவின் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் (FCA) $5.983 பில்லியன் அதிகரித்து 597.552 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்று ரிசர்வ் வங்கி தரவு வெளிப்படுத்துகிறது. தங்க கையிருப்பு $893 மில்லியன் அதிகரித்து $60.997 பில்லியனாக இருந்தது.
- 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷத் குமார் 2.04 மீ தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
- 2.12 மீ உயரம் தாண்டிய அமெரிக்க வீரர் தங்கப்பதக்கத்தையும், 2 மீ தாண்டிய ரஷிய வீரர் வெண்கல பதக்கத்தையும் வென்றனர். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து 27-வது இடத்தை பிடித்துள்ளது.
- தெற்காசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடந்ததால் இப்போட்டியைக் காண கடந்த 2 நாட்களாக ஆர்வத்துடன் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார்.
- இந்தியன் எப்4 பிரிவில், ஆஸ்திரேலியாவின் ஹக் பார்ட்டர் (காட்ஸ்பீடு கொச்சி அணி) சாம்பியன் பட்டம் வென்றார். பெங்கால் டைகர்ஸ் அணியின் ருஹான் ஆல்வா 2வது இடமும், பெங்களூர் ஸ்பீட்ஸ்டர்ஸ் அணி வீரர் அபய் மோகன் 3வது இடமும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
- பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8ஆம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. பாராலிம்பிக்ஸில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
- இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில், பாராலிம்பிக்ஸ் ஆடவர் பேட்மிண்டன் போட்டியின் SL3 பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார், கிரேட் பிரிட்டனை சேர்ந்த டேனியல் பெத்தல் என்பவரை எதிர்கொண்டார்.
- ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடி வந்த நிதேஷ் குமார், தொடக்க செட்டை 21-க்கு 14 என்ற கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் இந்திய வீரர் நிதேஷ் 23-க்கு 21 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கம் கிடைத்தது.
- இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் 22வது இடத்திற்கு முன்னேறியது.
- முன்னதாக இந்திய அணி 30வது இடத்தில் இருந்த நிலையில், நிதேஷ் குமாரின் தங்கப் பதக்கத்தின் மூலம் பட்டியலில் 8 இடங்கள் முன்னேறி தற்போது 22வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் ரூ.14,235.30 கோடி மதிப்பீட்டில் ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- ஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் அடிப்படையில், டிஜிட்டல் வேளாண் இயக்கம் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இந்த இயக்கத்திற்கு மொத்தம் ரூ.2,817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தில் கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான பயிர் அறிவியல் - மொத்த ஒதுக்கீடு ரூ.3,979 கோடி. இந்த முயற்சி விவசாயிகளை பருவநிலை நெகிழ்திறனுக்கு தயார்படுத்துவதுடன் 2047-ம் ஆண்டுக்குள் உணவு பாதுகாப்பை வழங்கும்.
- வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியலை வலுப்படுத்துதல் - மொத்தம் ரூ.2,291 கோடி ஒதுக்கீட்டில் இந்த நடவடிக்கை வேளாண் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை தற்போதைய சவால்களுக்கு தயார்படுத்தும்.
- நிலையான கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி - மொத்தம் ரூ.1,702 கோடியில், கால்நடைகள் மற்றும் பால் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- தோட்டக்கலையின் நிலையான வளர்ச்சி - மொத்தம் ரூ.1,129.30 கோடி செலவில் இந்த நடவடிக்கை தோட்டக்கலை தாவரங்களிலிருந்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ரூ.1,202 கோடியில் வேளாண் அறிவியல் மையத்தை வலுப்படுத்துதல்
- ரூ.1,115 கோடியில் இயற்கை வள மேலாண்மை.
- துடிப்பான செமிகண்டக்டர் சூழலியல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குஜராத்தின் சனந்த் நகரில் ஒரு செமிகண்டக்டர் அலகை நிறுவுவதற்கு கெய்ன்ஸ் செமிகான் தனியார் நிறுவனத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- ரூ.3,300 கோடி முதலீட்டில் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தத் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் நாள் ஒன்றுக்கு 60 லட்சம் சில்லுகள் (சிப்புகள்) ஆகும்.
- இந்தப் பிரிவில் உற்பத்தி செய்யப்படும் சில்லுகள் தொழில்துறை, வாகன, மின்சார வாகனங்கள், நுகர்வோர் மின்னணுவியல், தொலைத்தொடர்பு, மொபைல் போன்கள் போன்ற பிரிவுகளை உள்ளடக்கிய பல்வேறு வகையான பயன்பாடுகளைப் பூர்த்தி செய்யும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் சுமார் ரூ.18,036 கோடி மதிப்பீட்டிலான புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்தூர் - மன்மாட் இடையே முன்மொழியப்பட்டுள்ள புதிய பாதை நேரடி இணைப்பை வழங்குவதுடன், இந்திய ரயில்வேக்கு மேம்பட்ட செயல்திறனையும், சேவை நம்பகத்தன்மையையும் அளிக்கும். இந்தத் திட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப உள்ளது.
- மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் உள்ள 6 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் கட்டமைப்பை சுமார் 309 கி.மீ. வரை அதிகரிக்கும்.
- இந்தத் திட்டத்தின் மூலம், 30 புதிய ரயில் நிலையங்கள் கட்டப்படும். இது முன்னேற விரும்பும் மாவட்டமான பர்வானிக்கு இணைப்பை மேம்படுத்தும். புதிய வழித்தடத் திட்டம் சுமார் 1,000 கிராமங்களுக்கும் சுமார் 30 லட்சம் மக்களுக்கும் இணைப்பை வழங்கும்.