தமிழக அமைச்சரவையில் மாற்றம்
- தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன் உள்பட 4 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- செந்தில் பாலாஜி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை
- கோவி செழியன் - உயர்கல்வித் துறை
- ஆர்.ராஜேந்திரன் - சுற்றுலாத் துறை
- ஆவடி நாசர் - சிறுபான்மை நலத்துறை மற்றும் அயலகத் தமிழர் நலன் துறை
- இதுதவிர, குன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா. ராமசந்திரன் அரசுத் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். அதேபோல் 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டது.
- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் தற்போது பால்வளத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்துக்குள்பட்ட கீழடி, கொந்தகை ஆகிய இடங்களில், பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை, அகழ்வாராய்ச்சி தளத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இந்த நிலையில், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- கி.பி. 17 ஆம் நூற்றாண்டு புழக்கத்தில் இருந்த தென் இந்திய தங்க காசு என சொல்லப்படும் இந்த தங்க நாணயத்தின் ஒரு பக்கத்தில், 6 இதழ் கொண்ட பூ வடிவமும், மற்றொரு பக்கத்தில் கோடுகளால் அலங்கறிக்கப்பட்டுள்ளது.
- ஏற்கனவே, கீழடி அகரம் பகுதியில் நடைபெற்ற 6 ஆம் கட்ட அகழாய்வு பணியின் போது கி.பி. 17 ஆம் நூற்றாண்டு புழக்கத்தில் இருந்த தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- ஸ்வர்கேட் மாவட்ட நீதிமன்றத்தின் புனே மெட்ரோ பிரிவைப் பிரதமர் தொடங்கி வைத்தார். புனே மெட்ரோ முதல் கட்டத்தின் ஸ்வர்கேட்-கத்ராஜ் விரிவாக்கப் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- சோலாப்பூர் விமான நிலையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். பிதேவாடாவில் கிராந்திஜோதி சாவித்ரிபாய் புலே அவர்களின் முதல் பெண்கள் பள்ளி நினைவு வளாகத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிட்கின் தொழிற்பகுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (29.09.2024) நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
- டெல்லி-மும்பை தொழில்துறை வழித்தடத்தின் ஒரு பகுதியாக தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டு திட்டத்தின் (என்.ஐ.சி.டி.பி) கீழ் 7,855 ஏக்கர் பரப்பளவில் பிட்கின் தொழில்துறை பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகருக்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த தொழில்துறை மையம் மராத்வாடா பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது.