சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு
- மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பெயரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கடந்த ஜூலையில் கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது.
- இதையடுத்து, கே.ஆர்.ஸ்ரீராம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று(செப்.,27) அவர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
- வானிலை, பருவநிலை ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட, புவி அறிவியல் அமைச்சகத்தால் பெறப்பட்ட உயர் செயல்திறன் கணினி (எச்பிசி) அமைப்பைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- இந்த லட்சிய திட்டம் ரூ. 850 கோடி முதலீட்டைக் கொண்டது. இது மிகவும் நம்பகமான, துல்லியமான வானிலை, காலநிலை முன்னறிவிப்புக்கான இந்தியாவின் கணக்கீட்டு திறன்களில் குறிப்பிடத்தக்க பாய்ச்சலைக் காட்டுகிறது.
- புனேயில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐ.ஐ.டி.எம்), நொய்டாவில் உள்ள நடுத்தர தூர வானிலை முன்னறிவிப்பு தேசிய மையம் (என்.சி.எம்.ஆர்.டபிள்யூ.எஃப்) ஆகிய இரண்டு முக்கிய இடங்களில் இவை அமைந்துள்ளன.
- ஐ.ஐ.டி.எம் அமைப்பு 11.77 பீட்டா ஃப்ளாப்ஸ் மற்றும் 33 பெட்டாபைட் சேமிப்பகத்தின் ஈர்க்கக்கூடிய திறன் கொண்டது, அதே நேரத்தில் என்.சி.எம்.ஆர்.டபிள்யூ.எஃப் வசதி 24 பெட்டாபைட் சேமிப்பகத்துடன் 8.24 பீட்டா ஃப்ளோப்ஸைக் கொண்டுள்ளது.
- இதில் கூடுதலாக, 1.9 பீட்டா ஃப்ளாப்ஸ் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் பயன்பாடுகளுக்கு பிரத்யேக தனித்துவ அமைப்பு உள்ளது.
- இந்த விரிவாக்கத்தின் மூலம், புவி அறிவியல் அமைச்சகம் அதன் மொத்த கணினி சக்தியை 22 பீட்டா ஃப்ளாப்ஸ் ஆக உயர்த்தும், இது முந்தைய திறனான 6.8 பீட்டா ஃப்ளாப்சிலிருந்து கணிசமான அதிகரிப்பாகும்.
- பாரம்பரியத்திற்கு இணங்க, இந்த அதிநவீன அமைப்புகளுக்கு சூரியனுடன் இணைக்கப்பட்ட வான அமைப்புகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. முந்தைய அமைப்புகளுக்கு ஆதித்யா, பாஸ்கரா, பிரதியுஷ், மிஹிர் என்று பெயரிடப்பட்டது.
- புதிய எச்பிசி அமைப்புகளுக்கு 'அர்கா', 'அருணிகா' என்று பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது. இது புவி அமைப்பின் முதன்மை ஆற்றல் ஆதாரமான சூரியனுடனான அவற்றின் தொடர்பை பிரதிபலிக்கிறது.
- ஐ.நா.வின் உறுப்பு அமைப்பான ''குளோபி'' என்ற அமைப்பு ஊழலுக்கு எதிரான சர்வதேச அமைப்பாகும்.
- இதில் 121 நாடுகளைச் சேர்ந்த 291 பேர் உறுப்பினர்களாக உள்ளன. 2021ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ.நா. பொதுச்சபை சிறப்பு கூட்டத்தின் போது இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, தலைவர், துணை தலைவர், 13 உறுப்பினர்கள் என 15 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு மூலம் செயல்பட்டு வருகிறது.
- நாடுகளுக்கிடையே எல்லை தாண்டிய ஊழல் குற்றங்களைக் கண்டறிந்து, விசாரணை செய்து, சட்ட அமலாக்க அதிகார அமைப்புகளுடன் இணைந்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் இந்த அமைப்பு கொண்டுள்ளது.
- இந்நிலையில் சீன தலைநகர் பீய்ஜிங்கில் இந்த அமைப்பின் 5 வது அமர்வில் நடந்த பல்வேறு கட்ட வாக்கெடுப்பிற்கு பின் வழிகாட்டுதல் குழுவில் இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.