26th SEPTEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
- சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் (NSM) கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள், முன்னோடி அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவுவதற்காக புனே, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ளன.
- வானிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் (HPC) அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- ஐக்கிய நாடுகள் சபையில் எய்ட்ஸ் நோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மறுபரிசீலனை செய்தல் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ஒன்றிய சுகாதார துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் கலந்து கொண்டு பேசினார்.
- அப்போது, 2030ம் ஆண்டுக்குள் எச்ஐவி/ எய்ட்ஸ் நோயை பொது சுகாதார அச்சுறுத்தலாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கை அடைய இந்தியா முயற்சித்து வருகிறது.
- 2023ம் ஆண்டு அறிக்கையின்படி இந்தியாவில் 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் எச்ஐவியுடன் வாழ்கின்றனர். ஒராண்டில் சுமார் 66400 பேர் எச்ஐவியால் பாதிக்கப்படுகின்றனர்.
- கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆண்டு புதிய எச்ஐவி தொற்று பாதிப்பு 44 சதவீதம் குறைந்துள்ளது. இது உலகளாவிய குறைப்பு விதிதமான 39சதவீதத்தை விட அதிகமாகும் என்று அவர் தெரிவித்தார்.
- 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இருந்த ஜப்பானை முன்னுக்குத் தள்ளி 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா. பொருளாதார வளர்ச்சி, இளைஞர் சக்தி, உலக அளவில் அரசின் செல்வாக்கு போன்ற அளவீடுகளின் படி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- கொரோனா தொற்று தாக்குதலுக்கு பிறகு இந்திய பொருளாதாரம் விரைந்து மீட்சி பெற்றுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் 4.2 புள்ளிகள் உயர்ந்து இந்தியா வலுவான நிலையில் உள்ளதாக லோவி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
- மக்களின் வாங்கும் சக்தி அடிப்படையிலும் உலகிலேயே 3ஆவது பெரிய பொருளாதாரத்தை இந்தியா பெற்றுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. மக்கள்தொகை பெருக்கத்தோடு, ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பும் அதிகரிப்பது இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றுகிறது.
- சீனா, ஜப்பான் மக்கள்தொகையில் முதியோர் எண்ணிக்கை உயரும் நிலையில் இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. உழைக்கும் வயதுடைய இளைஞர்கள் இந்தியாவில் அதிகரித்து வருவதாலேயே, பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெறும் என விளக்கம் அளித்துள்ளது.