ஐ.நா.வின் 'எதிா்காலத்துக்கான உச்சிமாநாட்டில்' பிரதமா் மோடி பங்கேற்பு
- ஐ.நா.வின் 'எதிா்காலத்துக்கான உச்சிமாநாட்டில்' பிரதமா் மோடி திங்கள்கிழமை பங்கேற்று உரையாற்றினாா். இஸ்ரேல் - ஹமாஸ், ரஷியா-உக்ரைன் இடையிலான போா்களின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்துவரும் நிலையில், ஐ.நா.வில் பிரதமா் தெரிவித்த கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
- மாநாட்டில் பிரதமா் மோடி பேசியதாவது: மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கு மக்களின் குரலை ஐ.நா.வுக்கு கொண்டுவந்துள்ளேன். உலகின் எதிா்காலம் குறித்து நாம் விவாதிக்கும்போது, மனிதகுலத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு உயா் முன்னுரிமை அளிப்பது முக்கியம்.
- ஒருபுறம், உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தீவிரமான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் நீடித்து வருகிறது. மற்றொருபுறம், இணையவெளி, கடல்சாா் போக்குவரத்து, விண்வெளி உள்ளிட்ட துறைகள், மோதலுக்கான புதிய களங்களாக உருவெடுத்துள்ளன.
- இந்த சவால்கள் அனைத்திலும் உலகளாவிய செயல்பாடுகள், உலகளாவிய லட்சியத்துக்கு பொருந்துவதாக இருக்க வேண்டும். மனிதகுலத்தின் வெற்றி, நம் அனைவரின் கூட்டு வலிமையில்தான் உள்ளது; மாறாக, போா்க் களத்தில் இல்லை.
- இந்தியாவின் தலைமையின்கீழ் ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் இணைப்பு முக்கிய நடவடிக்கையாகும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தற்போதைய புவி-அரசியல் எதாா்த்தங்களைப் பிரதிபலிக்கவில்லை. இந்த கவுன்சிலில் சீா்திருத்தம் மேற்கொள்ளும் பல்லாண்டு கால முயற்சிகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
- இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். இது, வெற்றிகரமான நீடித்த வளா்ச்சிக்கு சாட்சியாக உள்ளது.
- பாதுகாப்பான-பொறுப்பான தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கு உலக அளவில் சமநிலைப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை அவசியம். தேசிய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்யக் கூடிய உலகளாவிய எண்ம நிா்வாகம் தேவை என்றாா் அவா்.
- மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக கடந்த சனிக்கிழமை அமெரிக்காவுக்கு வந்த பிரதமா் மோடி, தனது பயணத்தின் கடைசி நாளான திங்கள்கிழமை ஐ.நா.வில் உரையாற்றினாா்.
- முன்னதாக, எதிா்கால சந்ததியினரின் வளமை மற்றும் முன்னேற்றத்துக்கான பிரகடனம் உள்ளடங்கிய 'எதிா்காலத்துக்கான ஒப்பந்தம்', இந்த உச்சிமாநாட்டில் உறுப்பு நாடுகளால் ஞாயிற்றுக்கிழமை ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் செப்டம்பர் 24, 2024 அன்று புதுதில்லியில் இந்திய கடலோரக் காவல்படை (ஐசிஜி) தளபதிகள் மாநாட்டின் 41வது பதிப்பை திறந்து வைத்தார்.
- வளர்ந்து வரும் புவிசார் அரசியல் நிலப்பரப்புகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு சிக்கல்களின் பின்னணியில் உத்திசார், செயல்பாட்டு மற்றும் நிர்வாக விஷயங்களில் அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட இந்திய கடலோரக் காவல்படை தளபதிகளுக்கு இந்த மூன்று நாள் கூட்டம் ஒரு முக்கிய மன்றமாக செயல்படுகிறது.
- மாநாட்டின் போது, ஐ.சி.ஜி தளபதிகள், பாதுகாப்புப் பணியாளர்களின் பிரதிநிதி, கடற்படை அதிகாரிகள் மற்றும் தலைமைப் பொறியியலாளர் ஆகியோருடன் கலந்துரையாடுவார்கள்.
- கடல்சார் பாதுகாப்பின் முழு வீச்சிலும் சேவைகளிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக இந்த விவாதங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் கடலோரக் காவல்படையின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேம்படுத்துகின்றன.