கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 கோடி ரூபாய் முதலீட்டில், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், கேட்டர்பில்லர் நிறுவனத்தின் இயக்குநர் திரு. புவன் அனந்தகிருஷ்ணன், முதுநிலை துணைத் தலைவர் திரு. கெர்க் எப்லர் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- இதுவரைக்கும் நடத்தப்பட்ட அகழாய்வில் சூதுபவளம், சங்கு வளையல், அச்சு பதிக்கும் எந்திரம், சுடுமண் முத்திரை, பெண்கள் அணியக்கூடிய தொங்கட்டான், செப்பு காசுகள், மண்பாண்ட பொருட்கள், உள்பட 1,700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் முதல்முறையாக சேதமடையாத நிலையில் பெரிய அளவிலான சிவப்பு நிற கூம்பு வடிவ மண்பாண்ட பாத்திரம் கிடைத்துள்ளது.
- முன்னோர்கள் இதனை உணவு அருந்தவோ, மண் பாண்டங்களுக்கு மூடியாகவோ பயன்படுத்தி இருக்கலாம். சமையல் பாத்திரம் உடையாத வகையில் சுடு மண்ணால் நுணுக்கமாக செய்யப்பட்டுள்ளது.
- ஜூலை 2024 மாதத்திற்கான தொழில்துறை குறியீட்டு வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாகும். இது 2024 ஜூன் மாதத்தில் 4.7% ஆக இருந்தது.
- ஜூலை மாதத்திற்கான விரைவு மதிப்பீடுகள், 2024, ஜூன் மாதத்திற்கான முதல் திருத்தம் மற்றும் 2024 ஏப்ரல் மாதத்திற்கான இறுதி திருத்தம் ஆகியவை முறையே 91 சதவீதம், 94 சதவீதம் மற்றும் 96 சதவீதம் என்ற விகிதங்களில் தொகுக்கப்பட்டுள்ளன.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பொதுப் போக்குவரத்து ஆணையங்கள் மூலம் மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்குவதற்கான "PM-eBus சேவை பாதுகாப்பு வழிமுறை (PSM) திட்டத்திற்கு ரூ.3,435.33 கோடி ஒதுக்கீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது .
- இந்தத் திட்டம், 2024-25 நிதியாண்டு முதல் 2028-29 நிதியாண்டு வரை 38,000 க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை (இ-பேருந்துகள்) பணியில் ஈடுபடுத்த உதவும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து 12 ஆண்டுகள் வரை மின்-பேருந்துகளின் செயல்பாட்டை ஆதரிக்கும்
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டில் மின்சார இயக்கத்தை ஊக்குவிப்பதற்காக, "புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார ஓட்டுதல் புரட்சி (PM E-Drive) திட்டம்" என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான கனரக தொழில்கள் அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த திட்டத்திற்கு இரண்டு ஆண்டுகளில் ரூ .10,900 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 24.79 லட்சம் e-2Ws, 3.16 லட்சம் e-3W மற்றும் 14,028 இ-பேருந்துகளை வாங்க உதவிகரமாக இருக்கும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 12,461 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில், நீர்மின் திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவதற்கான பட்ஜெட் ஆதரவு திட்டத்தை மாற்றியமைப்பதற்கான மின்சார அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டம் 2024-25 நிதியாண்டு முதல் 2031-32 நிதியாண்டு வரை செயல்படுத்தப்படும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், "2024-25 முதல் 2028-29 நிதியாண்டில் பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம்-IV (PMGSY-IV)" -ஐ செயல்படுத்துவதற்கான ஊரக வளர்ச்சித் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- சாலை வசதி இல்லாத, தகுதி வாய்ந்த 25,000 குடியிருப்புகளுக்கு புதிய இணைப்புச் சாலைகள் அமைக்கவும், புதிய இணைப்புச் சாலைகளில் பாலங்கள் கட்டுதல் / மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக 62,500 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அமைக்க நிதியுதவி வழங்கப்படும்.
- இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.70,125 கோடியாகும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.70,125 கோடி (மத்திய அரசின் பங்கு ரூ.49,087.50 கோடி மற்றும் மாநில பங்கு ரூ.21,037.50 கோடி).
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இரண்டு ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பீட்டிலான 'வானிலை இயக்கத்திற்கு' (மிஷன் மவுசம்) ஒப்புதல் அளித்தது.
- இந்திய வானிலை ஆய்வுத் துறை, இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் மற்றும் நடுத்தர தொலைவு வானிலை முன்னறிவிப்பு தேசிய மையம் ஆகியவை, வானிலை இயக்கம் திட்டத்தை முதன்மையாக செயல்படுத்தும்.
- பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வந்தது.
- தற்போது சமூக - பொருளாதார நிலைகளை கடந்து 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்திட்டத்தின்கீழ் காப்பீடு வழங்கப்படும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தால் 4.5 கோடி குடும்பங்களில் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள்.
- காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 102-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
- அக்டோபர் மாதம் தர வேண்டிய 20 டி.எம்.சி. நீரை கர்நாடகா காவிரியில் திறக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தரப்பில் கோரிக்கை வைத்துள்ளது.
- அதற்கு, ஏற்கனவே 56 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்கப்பட்டு விட்டது. செப்டம்பர் மாதம் கொடுக்க வேண்டிய 36 டி.எம். சிக்கு பதிலாக 96 - டி.எம்.சி கொடுத்துள்ளோம் என கர்நாடகா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உபரிநீர் தான் கொடுக்கப்பட்டது என்பதால் அதை கணக்கில் கொள்ள கூடாது என தமிழ்நாடு தரப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.