7th AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் 2-வது இடத்தை பிடித்து தமிழ்நாடு சாதனை
- உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் 2-வது இடத்தை பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. 595 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து தேசிய அளவில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.
- உடல் உறுப்புகளுக்காக காத்திருந்தவர்களுக்கு 178 உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு சாதனை படைத்தது. இந்தியாவில் அதிகளவில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது
- வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்க அதிபர் முகமது சஹாபுதீன் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இடைக்கால அரசின் தலைவரை நியமிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- இதில் அதிபர் சஹாபுதீன், முப்படை தளபதிகள், ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- இதில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் நியமிக்கப்பட்டார். இதனை அதிபர் முகமது சஹாபுதீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
- லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீள உதவியதற்காக 2006ம் ஆண்டு யுனிஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- முன்னதாக மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், வங்கதேச நாடாளுமன்றத்தை அந்நாட்டு ஜனாதிபதி முகமது சஹாபுதீன் நேற்று கலைத்துள்ளார்.
- இதன் மூலம் புதிதாக பொதுத்தேர்தல் நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுவரையிலும் இடைக்கால அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.
- இரண்டு நாள் பயணமாக தீவு நாடான ஃபிஜிக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பயணம் மேற்கொண்டாா். அந்நாட்டு தலைநகா் சுவாவில் அவருக்கு 'கம்பானியன் ஆஃப் தி ஆா்டா் ஆஃப் ஃபிஜி' என்ற விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
- இது அந்நாட்டின் உயரிய விருதாகும். இந்த விருதை குடியரசுத் தலைவா் முா்முக்கு ஃபிஜி அதிபா் கேடோனிவிா் வழங்கினாா். தனக்கு அளிக்கப்பட்ட இந்த கெளரவம், இந்தியா, ஃபிஜி இடையிலான வலுவான உறவின் பிரதிபலிப்பு என்று குடியரசுத் தலைவா் முா்மு தெரிவித்தாா்.
- ஃபிஜி பயணத்தைத் தொடா்ந்து நியூசிலாந்து, தென்கிழக்கு ஆசிய நாடான டிமோா்-லெஸ்டே ஆகிய 2 நாடுகளுக்கு முா்மு பயணம் மேற்கொள்ள உள்ளாா்.
- இந்திய குடியரசுத் தலைவா் ஒருவா் ஃபிஜி மற்றும் டிமோா்-லெஸ்டேக்கு செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.