4th AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
13 ஆம் நூற்றாண்டு கால ராஜேந்திர சோழன் கல்வெட்டு கண்டெடுப்பு
- திருக்கோவிலூர் அடுத்த கீழையூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் கோவிலில் தான் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கோவிலின் முன் பகுதியை சமன் செய்து கொண்டிருந்தபோது, சில கல் தூண்கள் தென்பட்டு உள்ளன.
- இந்த கல் தூண்களில் சில கல்வெட்டுகளும் காணப்பட்டன. இதனை அடுத்து கள்ளக்குறிச்சி கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கொண்டு ஆராய்வு செய்ததில், 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராஜேந்திர சோழனின் கல்வெட்டு என்பது தெரியவந்துள்ளது.
- மேலும் இந்த கல்வெட்டில் திருவெண்ணெய் நல்லூர் உள்ளிட்ட ஊர் பெயர்களும், பொன் - பொருள் தானமாக வழங்கப்பட்டது குறித்தும் எழுதப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
- மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, 2024 ஆகஸ்ட் 9 முதல் 15-ம் தேதி வரை 'ஹர் கர் திரங்கா எனப்படும் இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கத்தின் கீழ் மூவர்ணக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றி, https://harghartiranga.com இணையதளத்தில் தங்கள் சுய புகைப்படங்களைப் (செல்ஃபி) பதிவேற்றுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.